
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது நிதிப்பற்றாக்குறையாலும், சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்வாலும் இயங்காமல் இருந்தால் அவற்றை இயக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
இதற்காக மத்திய மின்சாரச் சட்டம் பிரிவு 11ன் கீழ் உத்தரவிட்டுள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த உத்தரவில் " நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி அனல் மின்நிலையங்களும் அதன் உட்பட்ச அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இறக்குமதி நிலக்கரியால் இயங்கக்கூடிய அனல் மின்நிலையங்கள் நிதிப்பிரச்சினையால் இயங்காமல் இருந்தால் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மூலம் பேசி, அந்த அனல்மின் நிலையத்தை இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நாட்டின் மின்தேவை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.நிலக்கரி சப்ளை அதிகரித்தபோதும் மின் உற்பத்தி உயரவில்லை இதனால் பல்வேறு மாநிலங்களில் மின் பற்றாக்குறை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவின் மூலம் தமிழகம், குஜராத், ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எஸ்ஸார் பவர் பிளான்ட், கோஸ்டல் எனர்ஜென் மின்திட்டங்களும் இயங்கும். டாடா பவர், அதானி பவர் பிளான்ட்டும் இயங்காமல் உள்ளன, அவையும் இயக்கப்படும்.
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்காக இந்திய ரயில்வே கடந்த மாதம் 29ம் தேதி முதல் இதுவரை 657 பயணிகள் ரயிலை மே 24ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய மின்பற்றாக்குறையை இந்தியா சந்தித்து வருகிறது. கோடை வெயில் கடுமையாக அதிகரித்துவருவதால் கடந்த 38 ஆண்டுகளில் இல்லாதவகையில் மின் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
ஆனால், மின்தேவைக்கு ஏற்றார்போல் நிலக்கரி உற்பத்தியும், சப்ளையும் போதுமான அளவில் மின்நிலையங்களுக்கு இல்லை. இதுதான் மின் உற்பத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தி மின்வெட்டை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் 43 சதவீத மின்நிலையங்கள் இறக்குமதிசெய்யப்டும் நிலக்கரியால் மின் உற்பத்தி செய்யப்படுபவை. இந்த மின்நிலையங்களில் இருந்து மட்டும் 17.6 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த அனல் மின் உற்பத்தியில் இந்த மின் நிலையங்கள் மட்டும் 8.6% பங்களிப்பு செய்கின்றன. ஆனால் நிலக்கரி இல்லாததால் இந்த உற்பத்தி நிலையங்கள் காற்றுடுகின்றன. இதையடுத்து, மின்உற்பத்தி அவசரச் சட்டத்தைக் கொண்டு இந்த அனல் மின்நிலையங்களை இயங்க வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
கடன்பிரச்சினையால் சிக்கித் தவித்து, மின் உற்பத்தி செய்யாமல் இருக்கும் மின் நிலையங்களை மத்திய மின் சக்தி துறை அமைச்சக அதிகாரிகள் அணுகியுள்ளனர் அவர்களின் கடனை சீரமைக்க உதவுவதாகத் தெரிவித்துள்ளனனர்.
நாட்டில் ஒவ்வொரு மின்உற்பத்தி நிலையத்திலும் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய மின் ஆணையத்துக்கு இருக்கிறது. ஏறக்குறைய 173 மின் உற்பத்தி நிலையங்களை இந்த ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்த மின் நிலையங்களில் ஏப்ரல் 21ம் தேதி நிலவரப்படி 2.193 கோடி டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருக்கிறது. ஆனால், நோமுரா பொருளாதார ஆய்வுநிறுவனத்தின் அறிக்கையில் 173 மின் நிலையங்களுக்கும் சேர்த்து 6.632 கோடி டன் நிலக்கரி இருந்திருக்க வேண்டும் அதைவிடக் குறைவாகவே கையிருப்பு இருக்கிறது.
மத்திய அரசின் நிலக்கரி கையிருப்பு விதிகளின்படி, ஒவ்வொரு அனல்மின் நிலையத்திலும் அடுத்த 24 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும், ஆனால், தற்போது வெறும் 9 நாட்களுக்கான கையிருப்பு மட்டுமே இருக்கிறது.
மத்திய மின் ஆணையத்தின் அறிக்கையின்படி, நாட்டில் 150 அரசு மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன, இதில் 81 மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டு 106.6 கோடி யூனிட்களாகவும், 2021ம் ஆண்டு 124.2 கோடி யூனிட்களாகவும் இருந்தது. இது 2022ம் ஆண்டில் 132 கோடி யூனிட்களாவ உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.