11 நாட்கள் மூடப்படும் வங்கிகள்... பணத்தை எடுத்து பையில வைத்துக் கொள்ளுங்கள் மக்களே..!

By Thiraviaraj RMFirst Published Oct 3, 2019, 11:32 AM IST
Highlights

அக்டோபர் மாதம் பண்டிகைகள் அதிகமாக வருவதால் இம்மாதம் 31 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை விடப்பட இருப்பதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம். 
 

இதனால் வாடிக்கையாளர்கள் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  இருப்பினும்  ஏடிஎம்களில் வழக்கம் போல தினமும் பணம் நிரப்பப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டும் 8-ம் தேதி தசராவை முன்னிட்டும் மூடப்பட உள்ளது. அது மட்டுமின்றி அக்டோபர்  -12 இரண்டாம் சனிக்கிழமை, 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களாகும். அக்டோபர் 20 ஆம் தேதி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை. 27 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை இது தவிர 28, 29 ஆகிய தேதிகளிலும் கோவர்த்தன பூஜை மற்றும் பாய் தூஜ் போன்ற வடமாநில பண்டிகைகளால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.

தசரா, தீபாவளி, பாய் தூஜ் மற்றும் பிற பண்டிகைகள் காரணமாக, 2019 அக்டோபரில் எஸ்.பி.ஐ வங்கி 11 நாட்களில் மூடப்படும். ஆகையால், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 2019 அக்டோபரில் வங்கி விடுமுறைகளின் முழு பட்டியலையும் வைத்திருப்பது முக்கியம். அக்டோபரில் எஸ்.பி.ஐ வங்கி விடுமுறைகள் தவிர, நவம்பர் 2019 ல் அடுத்தடுத்த நாட்களிலும் கடன் வழங்கப்படாது. ஏனெனில் - வங்கி இரண்டாவது சனிக்கிழமையன்று அதாவது நவம்பர் 9 ஆம் தேதி மூடப்படும். 

குரு நானக் ஜெயந்தி அக்டோபர் 11 ஆம் தேதியும் வங்கி விடுமுறையாகும் . எனவே, எஸ்பிஐயின் வங்கி சேவைகள் நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மூடப்படும். 

click me!