petrol price rise: பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் கட்டுபடுத்தவில்லை: ஹர்திப் சிங் பூரி கைவிரிப்பு

Published : Mar 09, 2022, 02:13 PM ISTUpdated : Mar 09, 2022, 02:15 PM IST
petrol price rise: பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் கட்டுபடுத்தவில்லை: ஹர்திப் சிங் பூரி கைவிரிப்பு

சுருக்கம்

petrol price rise:பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்கள் கையில் இல்லை. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்கள் கையில் இல்லை. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

5 மாநிலத் தேர்த்ல்

5 மாநிலத் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலைஉயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர் காரணாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன.

விலை உயர்வு

ஏனென்றால், கடந்தஆண்டு நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை பேரல் 81 டாலராக இருந்தது. தற்போது பேரல் 140 டாலராக அதிகரித்தாலும், இந்தியா 126 டாலருக்குத்தான் வாங்குகிறது.  ஏறக்குறைய 60 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் கையில் இல்லை

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் “ பெட்ரோல் , டீசல் விலை உயர்வு , குறைப்பு மத்திய அரசின் கைகளில் இல்லை. விலையை நாங்கள் கட்டுப்படுத்தவும் இல்லை. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. சர்வதேசஅளவில் உள்ள விலைதான் அதைத் தீர்மானிக்கிறது. மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிக்கிறது எனப் பேசுவதுதவறு. 

நாட்டுக்கான பெட்ரோல், டீசல் தேவையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தட்டுப்பாடு ஏதும் ஏற்படாது என்பதற்கு உறுதிதருகிறேன். நமது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலம்தான் நிறைவேற்றுகிறோம், எரிவாயுவில் 65 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். 

மக்கள் நலன்

உலகின் ஒருபகுதியில் போர் நடக்கும் சூழல் இருக்கிறது. இதை எண்ணெய் நிறுவனங்கள் உணர்வார்கள். இதை மனதில் வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறித்து முடிவெடுப்பார்கள். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவு எடுக்கும். 
இவ்வாறு ஹர்திப் பூரி தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்