Fuel price rise : கவலையாத்தான் இருக்கு; பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டோம்: நிர்மலா சீதாராமன்

By Pothy RajFirst Published Mar 9, 2022, 1:42 PM IST
Highlights

Fuel price rise :சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை  உள்நாட்டில் உயரும்போது அதைத்தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை  உள்நாட்டில் உயரும்போது அதைத்தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விலை உயர்வு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகியவை பொருளாதாரத் தடை விதித்துள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் எனும் அச்சத்தால் சர்வதேச சந்தையில் பேரல் 140 டாலராக அதிகரித்தது. 

இந்த விலை உயர்வு இந்தியாவிலும் அடுத்தசில தினங்களில் எதிரொலிக்கும். 5 மாநிலத் தேர்தலுக்காக கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. அடுத்தசில நாட்களில் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொருளாதார பாதிப்பு

ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயரும்பட்சத்தில் அதன் தாக்கம் பொருளாதாரத்தில் மோசமாக இருக்கும், அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். பணவீக்கமும் உயரும் என்பதால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வது அரசுக்கு வருவாயைக் கொடுத்தும் ஒருபக்கம் பெரிய தலைவலியாகத்தான் இருக்கும்

கட்டு்ப்பாட்டை மீறியது

பெங்களூரில் பட்ஜெட் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் நேற்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றுப் பங்கேற்றார். அப்போது, அவரிடம் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது:

சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையை நாம் தாங்கிக்கொண்டுதான் தீர வேண்டும். அடுத்த நிதியாண்டில் இதுபோன்ற எதிர்பாரா சூழலைச் சமாளிக்க சில அம்சங்களை வைத்துள்ளோம்.அதாவதுஇதற்கு முன் நிலவி வந்த விலையின் சாராசரி அடிப்படையில் விலையை நிர்ணயிக்கலாம் என்று இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய்விலை அந்த சராசரியை எல்லாம் கடந்துவிட்டது. இருந்தாலும், விலை உயர்வை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆய்வு செய்வோம்.

பாதிப்பை ஏற்படுத்தும்

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே நிறைவேற்றிக்கொள்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் ஏற்கெனவே 60 சதவீதம் உயர்ந்துவிட்டது. இந்த விலைஉயர்வு நிச்சயம் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவலையாகத்தான் இருக்கிறது.  இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எந்த அளவு நாம் அதை எதிர்கொள்ள தாயராக இருக்கிறோம் என்பது முக்கியம். 

அரசு நடவடிக்கை எடுக்கும்

கச்சா எண்ணெய் விலை உயர்வு எவ்வாறு செல்கிறது என்பது மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கச்சா எண்ணெய்விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் பட்சத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அதைப் பார்த்துக்கொண்டிருக்காமல் நிச்சயம்  மத்திய அ ரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கும்

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்


 

click me!