
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 1ம் தேதி முதல் தங்களுடைய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றின் விலையை உயர்த்துகிறது.
கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம், உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் வாகனங்கள் விலை ரூ.3ஆயிரம் வரை விலையை உயர்த்துவதாக ஹீரோ மோட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தேர்டுபார்டி இன்சூரன்ஸ் கட்டணஉயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடுத்தர குடும்பத்தினரும், ஏழை மக்களும் இரு சக்கரவாகனத்தை ஓட்டி வருகிறார்கள். இந்த சூழலில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் மாடலுக்கு தகுந்தார்போல் விலையை உயர்த்துவது என்ற அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிரோ மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் “கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம், உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் வாகனங்கள் விலை ரூ.3ஆயிரம் வரை விலையை உயர்த்துகிறோம். இந்த விலை உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்குவரும்” எனத் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கும், ஸ்கூட்டர்களுக்கும் எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து எந்தவிதமான விளக்கமும் ஹீரோ மோட்டார்ஸ் அளிக்கவில்லை. ஆனால், ரூ.3 ஆயிரம்வரை விலை உயர்கிறது என மட்டும்தெரிவித்துள்ளது.
சந்தையில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் 100 சிசி முதல் 200 4வி மாடல் வரை விற்பனை செய்கிறது. இதில் ஹெச்எப்100 மோட்டார் சைக்கிள் ரூ.51,450ஆகவும், எக்ஸ்பல்ஸ்2004வி மாடல் ரூ.1.32 லட்சமாகவும் இருக்கிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.