adani :கவுதம் அதானி ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை: கல்வி, மருத்துவ உதவிகளுக்கு வாரி வழங்குகிறார்

By Pothy RajFirst Published Jun 24, 2022, 7:49 AM IST
Highlights

 Gautam Adani and his familyto donate Rs 60,000 cr  :தொழிலதிபர் கவுதம் அதானியின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, அவரின் குடும்பத்தினர் ரூ.60ஆயிரம் கோடிக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திறன்மேம்பாடு தொடர்பான உதவிகளை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்

gautam adani  birthday: தொழிலதிபர் கவுதம் அதானியின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, அவரின் குடும்பத்தினர் ரூ.60ஆயிரம் கோடிக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திறன்மேம்பாடு தொடர்பான உதவிகளை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் இந்த உதவிகளை அதானி அறக்கட்டளை மூலம் செய்ய உள்ளனர். 

இந்த செலவுகள் அனைத்தையும் அதானி அறக்கட்டளை மேற்பார்வையில் நடக்கிறது. இந்திய கார்ப்பரேட் துறையில் ஒரு நிறுவனம் சார்பில் அளிக்கும் மிகப்பெரிய நலத்திட்ட உதவியாகும். அதுமட்டுமல்லாமல் அதானியின் தந்தை சாந்திலால்அதானியின் 100வது பிறந்தநாள் வருவதையடுத்தும் இந்த உதவிகளை அதானி குடும்பத்தினர் செய்கின்றனர்.

அதானி அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவின் மனிதவளத்தின்   திறனைப் பயன்படுத்த, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைபாடுகள் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு தடையாக உள்ளன. அதானி அறக்கட்டளை இந்த அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி முயற்சிகளில் கவனம் செலுத்தி சமூகங்களுடன் பணிபுரிவதில் சிறந்த அனுபவத்தைப் பெறும். எதிர்வரும் சவால்களையும், போட்டியையும் சமாளித்து எதிர்காலத்துக்காக செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளது.

தொழிலதிபர் கவுதம் அதானி ப்ளூம்பெர்க் தளத்துக்கு அளித்த பேட்டியில் “ என்னுடைய தந்தை சாந்திலால் அதானியின் 100-வது பிறந்தநாள் இந்த ஆண்டு வருகிறது, என்னுடைய 60வது பிறந்தநாள் 24ம்தேதி(இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எனது குடும்பத்தினர் ரூ.60ஆயிரம் கோடிக்கு சமூக நல உதவிகளான கல்வி, மருத்துவம், திறன்மேம்பாடு துறைகளில் நலத்திட்டங்களை அதானி அறக்கட்டளை மூலம் செய்ய உள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நாங்கள் செய்ய இருக்கும் நலத்திட்டங்களை எவ்வாறு செய்யலாம், எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பது குறித்து வல்லுநர்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் நாடியுள்ளோம்” எனத் தெரிவித்தார்

தொழிலதிபர் கவுதம் அதானியின் 60-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகளவில் அதிகமான மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் கோடீஸ்வரர்கள் வாரன் பஃப்பெட், மார்க் ஜூகர்பெர்க் ஆகியோர் இடத்தில் தற்போது அதானியும் இடம் பெற்றார். 
 

click me!