HDFC: HDFC bank: இப்படி வரும் smsயை ஓபன் பண்ணாதிங்க: வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கி எச்சரிக்கை

Published : Jun 14, 2022, 01:53 PM IST
HDFC: HDFC bank: இப்படி வரும் smsயை ஓபன் பண்ணாதிங்க: வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கி எச்சரிக்கை

சுருக்கம்

HDFC : HDFC bank : வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் கேஒய்சி விவரங்கள் கேட்டு ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் வரும் எஸ்எம்எஸ் செய்தியை ஓபன் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் கேஒய்சி விவரங்கள் கேட்டு ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் வரும் எஸ்எம்எஸ் செய்தியை ஓபன் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காலத்துக்குப்பின் மக்கள் டிஜிட்டல்பரிமாற்றத்தை நாடுவது அதிகரித்துவிட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வளரும் வேகத்துக்கு இணையாக  மோசடி செயல்களும் வளர்ந்து வருகின்றன. ஆனால், இந்த மோசடிகள் எந்தெந்த விதத்தில் வருகின்றன, எந்தெந்த முகத்தில் வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டால், நாம் பணத்தை பாதுகாப்பாக வைக்க முடியும்.

இதுபோன்ற மோசடி செயல்களில் சிக்காமல் தப்பிக்க வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  சீரான இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்பி வருகின்றன. அந்த வகையில் ஹெச்டிஎப்சி வங்கி தங்களின் வாடிக்கையாளர்ளுக்கு புதிதாக ஒரு எச்சரி்க்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

 

அதில் ஹெச்டிஎப்சி சார்பில் வரும் எஸ்எம்எஸ் செய்தியில், பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்யக் கேட்டு எந்த எஸ்எம்எஸ் செய்தி வந்தாலும் பதில் அளிக்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விவரங்கள், ஏடிஎம், கிரெடிட் கார்டு விவரங்கள், பான்கார்டு விவரங்கள் கேட்டுவரும் எஸ்எம்எஸ்களுக்கு எந்த சூழலிலும் பதில் அளிக்காதீர்கள் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியாளர்கள் தேர்டுபார்டி இணையதளத்தின் மூலம் வங்கியின் இணையதளத்தைப் போல், மின்னணு இணையதளத்தைப் போல், சேர்ச்எஞ்சின்  போல் உருவாக்கி மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த இணையதளங்கள் மூலம் மோசடியாளர்கள் எஸ்எம்எஸ், சமூக வலைத்தளம், மின்அஞ்சல், மெசஞ்சர்உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் லிங்குகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர்.

இவற்றைப் பார்க்கும் பெரும்பலான வங்கியிலிருந்து வந்துள்ள எஸ்எம்எஸ் என்று நினைத்து க்ளிக் செய்துவிடுவார்கள். கிளிக் செய்து சில நிமிடங்களில் அனைத்து விவரங்களையம் ஹேக்கர்கள் எடுத்து பணத்தை கணக்கிலிருந்து எடுத்துவிடுவார்கள். 
பல வாடிக்கையாளர்கள் அந்த லிங்க் எங்கிருந்து வந்துள்ளது, யுஆர்எல் என்ன, பிஎன் எண் கேட்கிறதா, ஓடிபி கேட்கிறதா என்று அறியாமல் கிளிக் செய்து சிக்கிக்கொள்கின்றனர்.

எச்சரிக்கையாக இருப்பது எப்படி

1.    எஸ்எம்எஸ்களில் வரும் தெரியாத லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது. சந்தேகத்துக்குரிய லிங்க்குள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் வந்தால் அதை திறக்காமல் அழித்துவிட வேண்டும்.மின்அஞ்சல் வந்தாலும் அதை படிக்காமல் அழித்துவிட வேண்டும்.

2.    ஆன்-லைன் வர்த்தகம்,வங்கி, சேர்ச்எஞ்சின் ஆகியவற்றின் லிங்க்குகளை தாங்கிவரும் மின்அஞ்சல்களை உடனடியாக அழித்து, அந்தத் தளத்தை அன்சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும்.

3.    எப்போதுமே சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு சென்றுதான் பரிமாற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தின் விவரங்களை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.

4.    வங்கி இணையதளத்துக்குள் நுழையும்முன் பேட்லாக் சிம்பல், பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டும்

5.    யுஆர்எல், டொமைன் பெயர் ஆகியவை தவறான வந்திருந்தால், அதை சரிபார்த்தபின் இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!
Share Market: கெத்து காட்டும் பத்து நிறுவனங்களின் பங்குகள்.! வாங்கி போட்டால் சொத்து வாங்கலாம்.!