bitcoin price: crypto: பிட்காயின் நிலைமை இப்படியா ஆகணும்! 5 ஆண்டுக்கு முந்தை மதிப்பளவுக்கு வீழ்ச்சி

By Pothy RajFirst Published Jun 14, 2022, 12:45 PM IST
Highlights

bitcoin price: crypto: கிரிப்டோகரன்ஸியின் ராஜாவான பிட்காயின் மதிப்பு இன்று ஒரு காயினுக்கு 21 ஆயிரம் டாலராகச் சரிந்துள்ளது. இதன் மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்புக்கு வீழ்ச்சி அடைந்தது.

கிரிப்டோகரன்ஸியின் ராஜாவான பிட்காயின் மதிப்பு இன்று ஒரு காயினுக்கு 21 ஆயிரம் டாலராகச் சரிந்துள்ளது. இதன் மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்புக்கு வீழ்ச்சி அடைந்தது.

உலகளவில் கிரிப்டோகரன்ஸி சந்தை மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 8 சதவீதம் சரிந்து 1.08 லட்சம் கோடி டாலராகக் குறைந்தது. அதிலும்  பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 14 சதவீதம் சரிந்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரிப்டோகரன்ஸி மதிப்பு 26 சதவீதம் குறைந்துள்ளது. 

மதிப்பு சரியக் காரணம் என்ன 

அமெரிக்காவில்40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒருமுறை பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. இந்நிலையில், பணவீக்கம் உயர்ந்ததையடுத்து கடுமையாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் அதாவது 50 முதல் 75 புள்ளிகள் வரை வட்டியைஉயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்யும் நோக்கில், தங்கள் முதலீட்டை கிரிப்டோவிலிருந்து எடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் கிரிப்டோ கரன்ஸி சந்தையும் ஆட்டம் கண்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கிரிப்டோசந்தையின் மதிப்பு ஒருலட்சம் கோடி டாலர் குறைந்துள்ளது

பணவீக்கம், குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ள பணவீக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் மனதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது.

பிட்கியான் மதிப்பு தொடர்ந்து 12வது வாரமாகச் சரிந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒருபிட் காயின் மதிப்பு 49ஆயிரம் டாலராக இருந்த நிலையில் தற்போது 21 ஆயிரம் டாலராகச் சரிந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பிட்காயின் மதிப்பு 68ஆயிரம் டாலராக உயர்ந்ததுதான் உச்சபட்சமாகும். அதன்பின் இப்போதுவரை பிட்காயின் மதிப்பு 60 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் மதிப்பு 14 ஆயிரம் டாலராகக் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதர கிரிப்டோ மதிப்பு

எத்திரியம் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 15 சதவீதம் சரிந்து ஒரு காயின் 1,159 டாலராகக் குறைந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எத்திரியம் மதிப்பு 34சதவீதம் சரிந்துள்ளது.

பினான்ஸ் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 10 சதவீதம் சரிந்து 217 டாலராகவும், கடந்த ஒரு வாரத்தில் 24 சதவீதம் மதிப்பு சரிந்துள்ளது. சொலோனா மதிப்பு 24 மணிநேரத்தில் 4 சதவீதம் குறைந்து, 28.14 டாலராகக் குறைந்துள்ளது. 
 

click me!