
gold rate today: gold rate in chennai:today:ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென எதிர்பாராத அளவு குறைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 95 ரூபாயும், சரணுக்கு 760 ரூபாயும் சரிந்துள்ளது. கடந்த 10 நாட்களில் முதல்முறையாக சவரண் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,835க்கும், சவரண் ரூ.38,680க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 சரிந்து ரூ.4,740 ஆகவும், சவரணுக்கு, ரூ. 760 உயர்ந்து, ரூ.37 ஆயிரத்து920க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 5 தேதி முதல் இன்றுவரை சவரண் ரூ.38 ஆயிரத்துக்கு குறையாமல் இருந்தநிலையில் தற்போது முதலமுறையாகக் குறைந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு சரிந்துள்ளது என்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக சரிவதாலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலை குறைந்துள்ளது வெள்ளி கிராம் ரூ.1.30 பைசா குறைந்து ரூ.66 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66000க்கு விற்பனையாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.