
கடன் வாங்குவது நாளுக்கு நாள் கடினமாகிக்கொண்டே வருகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து வங்கிகளும் வட்டியை உயர்த்தியுள்ளன. இதில் ஜூன்1ம் தேதி முதல் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன
இதில் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் உதவி வங்கியான ஹெச்டிஎப்சி, வீட்டுக்கடனுக்கான வட்டியை 5 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது ஜூன் 1ம்தேதி(நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை கடந்த மாதம் உயர்த்தியபின் ஹெச்டிஎப்சி வங்கி கடனுக்கான வட்டியை 30 புள்ளிகள் உயர்த்தியது. இதன் மூலம் கடந்த மே மாதத்திலிருந்து ஹெச்டிஎப்சி வங்கி 35 புள்ளிகள் வட்டியில் உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டிவீதம் 40 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
தற்போது 5 புள்ளிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், ரூ.30 லட்சம் வீட்டுக்கடன் பெற்றோர் இனிமேல் 7.15 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும், ரூ.30 லட்சத்துக்கு மேல்,ரூ.75 லட்சம்வரை கடன் வாங்கியவர்கள் 7.40 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். ரூ.75 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்கள் 7.50 சதவீதமும் வட்டி செலுத்த வேண்டும்.
பெண் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வீதம் 5 சதவீதம் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் 780க்கு மேல் இருந்தால் வட்டி 7.05 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மற்றொரு மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, இறுதிநிலை கடன் செலவு வீதத்தை(எம்எல்சிஆர்)30 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது ஜூன் 1ம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கியின் எம்எல்சிஆர் 7.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. 3 மாதத்துக்கு 7.35 சதவீதமும், 6மாதங்களுக்கு 7.50 சதவீதமும், ஓர் ஆண்டுக்கு 7.55 சதவீதமும் வழங்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கி
இது தவிர ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை 40 புள்ளிகளை கடந்த மே 4ம் தேதி உயர்த்தியது, இதையடுத்து, வட்டிவீதம் 8.10 சதவீதமாக உயர்ந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியும் எம்எல்சிஆர் வீதத்தை 15 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
எம்எல்சிஆர் வீதம் என்பது வங்கிகள் இந்த சதவீத வட்டிக்குக் குறைவாக கடன் வழங்கக்கூடாது என்பதாகும். இந்த வட்டிவீதம் 3 ஆண்டுகளுக்குள் வேண்டுமானாலும் மாற்றத்துக்குரியதாகும்.
எஸ்பிஐ வங்கி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஜூன் 1ம் தேதி முதல் வீட்டுக்கடன் வட்டியை உயர்த்தியுள்ளது. எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் ரேட் எனப்படும் இபிஎல்ஆர் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்பட்ட கடன் வீதம்(ஆர்எல்எல்ஆர்) 6.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.