gst increase for 143 items: 143 வகை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது! சாக்லேட், ஹேன்ட்பேக் விலை எகிறலாம்

Published : Apr 25, 2022, 02:48 PM ISTUpdated : Apr 25, 2022, 04:40 PM IST
gst increase for 143 items: 143 வகை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது! சாக்லேட், ஹேன்ட்பேக் விலை எகிறலாம்

சுருக்கம்

gst increase for 143 items : நாட்டில் ஏற்கெனவே பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, நடுத்தர, ஏழை மக்களுக்கு அழுத்தம் கொடுத்தும்வரும் நிலையில், அடுத்ததாக 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் உயர்த்த மத்திய அரசு தயாராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நாட்டில் ஏற்கெனவே பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, நடுத்தர, ஏழை மக்களுக்கு அழுத்தம் கொடுத்தும்வரும் நிலையில், அடுத்ததாக 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் உயர்த்த மத்திய அரசு தயாராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

raghuram rajan news: சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

இதன்படி ஹேன்ட்பேக்குகள், பெர்பியூம், டியோடரன்ட், சாக்லேட்கள், சூயிங் கம், ஆடைகள், தோல் பொருட்கள், வால்நட் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட உள்ளது.

92% பொருட்கள்

143 பொருட்களில் 92 சதவீத பொருட்கள், 18 சதவீதத்த வரிவிதிதத்திலிருந்து, 28சதவீத வரிக்கு மாற்றப்படுகிறது என்று ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இந்த 143 பொருட்களில் கைக்கடிகாரம், கஸ்டர்ட்பவுடர், அப்பளம், சூட்கேஸ், வெல்லம், பவர் பேங்க், 32இன்ச்சுக்கு கீழ் உள்ள கலர்டிவி, செராமிக் சிங்க், வாஷ் பேசின், கண் கண்ணாடி பிரேம்கள், ஆல்ஹலால் சேர்க்கப்படாத பானங்கள், ஆடைகள், தோல்பொருட்கள் ஆகியவற்றுக்கான வரி உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

raghuram rajan: ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதம் அல்ல: ரகுராம் ராஜன் பளீர்

வரிவிலக்கு

அப்பளம், வெல்லம் ஆகிய தற்போது வரிவிலக்கில் உள்ளன இவை 5 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு மாற்றப்படும். வால்நட்டுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், கஸ்டர்ட்பவுடருக்கானவரி 5 சதவீதத்திலிருந்து 18சதவீதமாகவும், சமையல்அறையில் பயன்படுத்தப்படும் மரப்பலகைகளுக்கான வரி 12 லிருந்து 18சதவீதமாகவும் உயரலாம்.

ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டம் மே மாதம் கூட இருக்கிறதுஇந்த கூட்டத்தில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது ஜிஎஸ்டி வரி 5,12,18,28ஆகிய 4 படிநிலைகளில் இருக்கிறது. 480வகையான பொருட்கள் வரிவிதிப்பில் உள்ளன.

power cut : கோடை கொதிக்குது; கரண்ட் இல்லாததால் மக்கள் திணறல்: அதிகரித்துவரும் மின்வெட்டுக்கு என்ன காரணம்?

ஆலோசனை

பிராண்டட் அல்லாத, பேக்கிங் செய்யப்படாத உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் வராது. உணவு அல்லாத சிலவகைப் பொருட்களை, 3 சதவீத வரிக்குள் சேர்க்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்திலிருந்து 7 அல்லது 8அல்லது 9ஆக உயர்த்தவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்