gst date extension: பதற்றம் வேண்டாம்! ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

Published : May 18, 2022, 10:28 AM IST
gst date extension: பதற்றம் வேண்டாம்! ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

சுருக்கம்

gst date extension  :ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்கள் காலக்கெடுவை தவறிவிட்டிருந்தால் பரவாயில்லை. அவர்களுக்கு வரும் 24ம் தேதி வரை ரிட்டன் தாக்கல் செய்ய  மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்கள் காலக்கெடுவை தவறிவிட்டிருந்தால் பரவாயில்லை. அவர்களுக்கு வரும் 24ம் தேதி வரை ரிட்டன் தாக்கல் செய்ய  மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஜிஎஸ்டி போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், ஏராளமானோர் வரி செலுத்த இயலவில்லை. இதனால்,ஏப்ரல் மாத பேமெண்ட் தொகையை வரும் 24ம் தேதிவரை செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இது குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை நேற்று இரவு ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் “ 2022, ஏப்ரல் மாதத்துக்கான FORM GSTR-3B தாக்கல் செய்யும் அவகாசம் மே 24ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று காலை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில் “ ஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-2பி உருவாக்குவதில் தொழில்நுட்ப சிக்கல் உருவாகியிருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த தொழில்நுட்பச் சிக்கலைத் தீர்த்து வைத்து விரைவில் ஜிஎஸ்டிஆர்-2பி மற்றும் 3 பி வழங்கப்படும். வரிசெலுத்துவோரிந் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு, 2022, ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி பைலிங் செய்யும் தேதியையும் நீட்டிக்க பரிசீலிக்கப்படும். ”எ னத் தெரிவித்திருந்தது.

ஜிஎஸ்டிஆர்-2பி என்பது ஆட்டோமேட்டிக் இன்புட் டேக்ஸ் கிரெடிட் ஸ்டேட்மென்ட்டாகும். ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள ஒவ்வொரு நிறுவனமும், தங்களின் மாதாந்திர விற்பனை, கொள்முதல் விவரங்களை ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் தாக்கல் செய்வதாகும். இது ஒவ்வொரு மாதம் 12ம் தேதியும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால்,ஜிஎஸ்டிஆர் என்பது ஒவ்வொரு மாதமும் 20 மற்றும் 22 மற்றும் 24ம் தேதிதகளில் வெவ்வேறு விதமான வரி செலுத்துவோர்களால் தாக்கல் செய்வதாகும்.

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, ஜிஎஸ்டிஆர் 2-பி ஸ்டேட்மென்ட் இணையதளத்தில் பதிவிறக்கமாவதில் சிக்கல் இருந்ததால், ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை நேரில் தாக்கல் செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை வரிசெலுத்துவோர்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்ய தாமதம் ஏற்பட்டதையடுத்து, ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சிஸ்டம் அனைத்தையும் பராமரிக்க ரூ.1,380 கோடியில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்த அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!
Gold Rate Today (டிசம்பர் 09) : குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!