gst council: பள்ளிகளில் இயங்கும் கேண்டீன், வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி வரியா?

Published : May 30, 2022, 05:06 PM IST
gst council: பள்ளிகளில் இயங்கும் கேண்டீன், வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி வரியா?

சுருக்கம்

GST council :பள்ளிக்கூடங்களில் செயல்படும் மாணவர்களுக்கான கேண்டீன், பள்ளி வாகனச் சேவை ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மகாராஷ்டிரா அட்வான்ஸ் ரூலிங்(ஏஆர்ஆர்) விளக்கமளித்துள்ளது.

பள்ளிக்கூடங்களில் செயல்படும் மாணவர்களுக்கான கேண்டீன், பள்ளி வாகனச் சேவை ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மகாராஷ்டிரா அட்வான்ஸ் ரூலிங்(ஏஆர்ஆர்) விளக்கமளித்துள்ளது.

பள்ளிகளில் செயல்படும் மாணவர்களுக்கான கேண்டீன் சேவை, பள்ளி வாகனச் சேவை ஆகியவற்றுக்கு சேவை வரி விதிக்கப்படுமா என்று மகாராஷ்டிரா ஏஆர்ஆர்  ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் பள்ளிகளில் செயல்படும் மாணவர்களுக்கான கேண்டீன், வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி விதிகளில் நடைமுறை இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா ஏஆர்ஆர் அமைப்பு கூறுகையில் “ பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் கேண்டீன் சேவை, வாகனச் சேவை, பள்ளிக்கு வழங்கப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவருவது விதிகளில் இல்லை. இந்த சேவைகள் அனைத்தும். பள்ளி ஏற்கெனவே இதற்கான கட்டணத்தை வசூலித்தால், இதை காம்போசைட் சப்ளை என்று கருத வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. 

காம்போசைட் சப்ளை என்பது, 2 பொருட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் சேவைகளை ஒருசெட்டாக விற்க முடியும், தனித்தனியாக விற்க முடியாது என்பதாகும்.

இதற்கிடையே ஜிஎஸ்டி வரி விதிமுறையை சீரமைக்க அதிகாரமிக்கஅமைச்சர்கள் குழு பரிந்துரைகளை அளிக்க உள்ளது. இதில் ஆன்லைன் கேம், சூதாட்ட கிளப் ஆகியவற்றுக்கு 28சதவீதம் வரிவிதிப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜூன்  மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுவது மாநிலங்களுக்கு இழப்பீட்டை நீட்டிப்பதாகும். ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வரிஇழப்பீடு தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது, அந்தவகையில் ஜூன் மாதத்தோடு அந்தக் காலம் முடிகிறது. அதன்பின் இழப்பீட்டை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கத் தேவையில்லை.

ஆனால், இந்த இழப்பீட்டை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன. குறி்ப்பாக பாஜக ஆளாத மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

2-வதாக ஜிஎஸ்டி வரிஅமைப்பு முறையை எளிமைப்படுத்துவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இதன்படி வரிவிதிப்பை மறுஆய்வு செய்தலும், வரிவிலக்கில் இருக்கும் பொருட்களையும் மறுஆய்வு செய்தலும் நடக்கும். அதாவது தற்போது வரிவிலக்கில் இருக்கும் பல பொருட்கள் வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படலாம். சிலவரிகள் நீக்கப்பட்டு, புதிய வரி உருவாக்கப்படலாம், அல்லது குறைக்கப்படலாம்.

அதாவது 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிகள் நீக்கப்பட்டு ஒரேஒரு வரி மட்டும் கொண்டுவரப்படலாம். 5 சதவீத வரி நீக்கப்பட்டு, 8 சதவீதமாக உயர்த்தப்படலாம். தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5, 12, 18 28 ஆகிய வீதத்தில் இருக்கிறது. இந்த படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்