gst council: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய , மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் விளாசல்

Published : May 19, 2022, 01:20 PM IST
gst council: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய , மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் விளாசல்

சுருக்கம்

gst council  :ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கட்டுப்படுத்தாது. நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் சம அதிகாரம் கொண்டவை, அவற்றுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கட்டுப்படுத்தாது. நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் சம அதிகாரம் கொண்டவை, அவற்றுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

குஜராத்தைச் சேர்ந்த மோகித் மினரல்ஸ் எனும் நிறுவனம் கப்பலில் கொண்டுவந்த சரக்கிற்கு 5% ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை குஜராத் அரசு விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த நிறுவனம், அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. மேலும்  பல்வேறு இறக்குமதியாளர்களும் கடல்வழியாகவரும் சரக்கிற்கு ஐஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுச் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் “ கடல்வழியாக வரும் சரக்குகளுக்கு 5% ஐஜிஎஸ்டி வரி விதிப்பது சட்டவிரோதமானது. ஆதாலல் அதை ரத்து செய்கிறோம். ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரம் என்பது பரி்ந்துரைகளை வழங்குவது மட்டும்தான். அதன் பரிந்துரைகள் மத்திய அரசையோ அல்லது மாநில அரசுகளையோ கட்டுப்படுத்தாது” என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பைஎதிர்த்து ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரம் என்பது பரி்ந்துரைகளை வழங்குவதும், ஆலோசனைகள் வழங்குவதுமட்டும்தான். அதன் பரி்ந்துரைகள் மத்தியஅரசையோ, மாநில அரசுகளையோ கட்டுப்படுத்தாது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஜிஎஸ்டி தொடர்பாக சட்டம் இயற்ற சமஅதிகாரம் உண்டு. 

ஜிஎஸ்டி கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகளுக்கு மதிப்பு இருக்கிறது, நாடாளுமன்றம் அதை மதிக்கவேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு, பரி்ந்துரைகள் என்பது, கூட்டாகச் சேர்ந்துஆலோசித்து எடுக்குப்பட்ட முடிவுகளின் தொகுப்பு. கூட்டாட்சியில் பெரும்பாலானோர் கருத்துக்களை எப்போதும் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் என்பது, அரசியல் விவாதங்கள், கூட்டாட்சியின் ஒருபகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசுக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஜிஎஸ்டி சட்டம் இயற்றுவது தொடர்பாக சமஅதிகாரம் இருக்கிறது.  அரசியலமைப்புச் சட்டம் நிராகரிப்பு விதிகளை கொண்டிருக்கவில்லை, ஜிஎஸ்டிகவுன்சில் கண்டிப்பாக தீர்வைநோக்கி செயல்படக்கூடியதாகவே இருக்க வேண்டும்.

அரசியலமைப்புச்சட்டத்தின் 246ஏ, 279ஏ ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், 246ஏ பிரிவு என்பது மத்திய, மாநில அரசுகள் சமம் என்று குறிப்பிடுகிறது. 279ஏ என்பது, மத்திய அரசும், மாநில அரசுகளும் தன்னிச்சையாக செயல்படமுடியாது எனக் குறிப்பிடுகிறது, ஆரோக்கியமான போட்டிமிகுந்த கூட்டாட்சியை வலியுறுத்துகிறது” எனத் தீர்ப்பளித்தார்.

இறக்குமதியாளர்கள் சார்பில் வாதிட்ட கெய்தான் அன் கோ கூட்டாளி அபிஷேக் ஏ ரஸ்தோகி கூறுகையில் “ உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜிஎஸ்டி விஷயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் நீதிமன்ற ஆய்வுக்கும் உட்படுத்தலாம் என்பதை குறிப்பிடுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் பரி்ந்துரைக்கு மதிப்பு மட்டுமே இருக்கிறது என்று ஏற்கெனவே நீதிமன்றம் தெரிவித்துள்ளது”எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!
Gold Rate Today (டிசம்பர் 09) : குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!