hdfc bank share: ஹெச்டிஎப்சி வங்கி பங்கு 52 வாரங்களில் இல்லாத சரிவு: இணைப்பு செய்திக்குப்பின் 26% வீழ்ச்சி

Published : May 19, 2022, 12:31 PM IST
hdfc bank share: ஹெச்டிஎப்சி வங்கி பங்கு 52 வாரங்களில் இல்லாத சரிவு: இணைப்பு செய்திக்குப்பின் 26% வீழ்ச்சி

சுருக்கம்

hdfc bank share::ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகள் கடந்த 52 வாரங்களில்இல்லாத அளவு சரிந்து, ரூ.1,282 எனச் சரிந்துள்ளது. மும்பைப் பங்குச்சந்தையி்ல் இன்று மட்டும் வர்த்தக நேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கிப் பங்கு 2 சதவீதம் சரிந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகள் கடந்த 52 வாரங்களில்இல்லாத அளவு சரிந்து, ரூ.1,282 எனச் சரிந்துள்ளது. மும்பைப் பங்குச்சந்தையி்ல் இன்று மட்டும் வர்த்தக நேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கிப் பங்கு 2 சதவீதம் சரிந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் நிறுவனத்தையும், ஹெச்டிஎப்சி வங்கியையும் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியானபின் 26 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி 52 வாரங்களில் இல்லாத அளவாக ஒரு பங்கு மதிப்பு ரூ.1724 ஆக என உயர்ந்தது. அதன்பின் 2022 ஏப்ரல்4ம் தேதி ஹெச்டிஎப்சி பங்கு அதிகபட்சமாக ரூ.1,721ஆக உயர்ந்தது அதன்பின் உயரவேஇல்லை.

கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியான அறிவிப்பில், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்படும் அதற்கு இருவாரிய நிர்வாகிகளும் ஒப்புதல் அளித்துவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த இணைப்புக்கு ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை, செபி, உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் ஒப்புதல் அளிக்க 15 முதல் 18 மாதங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுவரை ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி தனித்தனியாகவே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது

கடந்த மாதம் இந்திய பொருளாதாரக் கருத்தரங்கில் ஹெட்சிஎப்சியின் சிஇஓ கேக்கி மிஸ்திரி பேசுகையில் “ ஹெச்டிஎப்சி பங்குகள் சரிந்து வருவது தற்காலிகமானதே. ஹெச்டிஎப்சி இணைப்பு குறித்து இதுவரை நாங்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிவிக்கவில்லை.  இதற்கு 2முதல் 3 ஆண்டுகள்வரை ஆகலாம்” எனத் தெரிவித்தார். 

இருப்பினும் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி இணைப்புச் செய்திக்குப்பின் ஹெச்சிடிஎப்சி வங்கிப் பங்குகள் தொடர்ந்து சரி்ந்து வருகிறது. இதுவரை 26 சதவீதம் மதிப்பு குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உக்ரைன் போர், பணவீக்கம் ஆகியவை சேர்ந்து நெருக்கடி அளிக்கின்றன.

ஹெச்டிஎப்சி பங்கு இன்று மும்பைப்பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தில் 3 சதவீதம் சரிந்து ரூ.2,127 ஆகக் குறைந்தது. ஏப்ரல் 4ம் தேதி முதல் ஹெச்டிஎப்சி பங்கு மதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது, அப்போது பங்கு மதிப்பு ரூ.2,855 ஆக இருந்தது. 
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!
Gold Rate Today (டிசம்பர் 09) : குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!