
எல்ஐசி ஐபிஓ விற்பனை தொடங்குவதற்கு முன்பாக ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதால் அதற்கான பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் 25ம் தேதி ஐடிபிஐ வங்கி பங்குகள் விற்பனை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்ஐசி நிறுவனத்தில் அரசு தனக்கிருக்கும் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை செய்ய இருக்கிறது. அதற்கு முன்பாக, எல்ஐசி மற்றும், மத்திய அரசு தங்களிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கி பங்குகளை விற்பனை செய்ய வேண்டும்.
எல்ஐசியும், மத்திய அரசும் இணைந்து ஐடிபிஐ வங்கியின் 94 % பங்குகளை வைத்துள்ளன. இதில் எல்ஐசி 49.24 %, மத்திய அரசு 45.5% பங்குகளை வைத்துள்ளன. மற்ற முதலீட்டாளர்கள் 5.49% வைத்துள்ளனன. இதில் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 45.55% பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஐடிபிஐ பங்குள் விற்பனை அனைத்தும் ஆன்-லைன் மூலம்தான் நடக்கும். முதலீட்டாளர்களை நேரில் வரவழைத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் பங்கு விற்பனை நடத்த முடியாது என்பதால் அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைனில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பூர்வாங்கப்பணிகள் அனைத்தும் தொடங்கிவிட்டன.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன், நிதிஅமைச்சகம் தொடர்ந்து பேசி வருகிறது. மத்திய அரசுதன்னிடம் இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்வதா, அல்லது குறைத்து விற்பனை செய்வதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.