தீபாவளி பரிசு! தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

By SG Balan  |  First Published Nov 7, 2023, 7:48 PM IST

வரி பகிர்வு நிதியாக மொத்தம் ரூ.72,961.21 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேச அரசுக்கு ரூ.13,088.51 கோடி கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி தான் கிடைத்துள்ளது.


தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்துக்கான வரி பகிர்வு நிதியாக ரூ.2,976.10 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்னதாகவே வரி பகிர்வு நிதி விடுவிக்கப்படுகிறது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்துக்கான வரி பகிர்வு நிதியாக மொத்தம் ரூ.72,961.21 கோடி மத்திய நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேச அரசுக்கு ரூ.13,088.51 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி கிடைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

சூரியக் கதிர்வீச்சை பதிவு செய்த ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தமிழக அரசுக்கு போதிய அளவு வரி பகிர்வு நிதியைக் கொடுப்பதில்லை என்று மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தார். மத்திய அரசுக்குக் கிடைக்கும் நேரடி வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பில் அதிகமாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

👉 Union Government authorises release of tax devolution of ₹72,961.21 crore to all State Governments for November, 2023; three days ahead of the usual date of 10th November

👉 Early release enables State Governments to make in-time releases during festival season

Read more ➡️… pic.twitter.com/lz0h6C8OqN

— Ministry of Finance (@FinMinIndia)

மத்திய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், மத்தியில் அரசு நவம்பர் மாத வரி பகிர்வு நிதியை நவம்பர் 10ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 7ஆம் தேதியே விடுவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய்க்கு 29 பைசா கிடைக்கும் நிலையில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திற்கு ஒரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது. அதாவது உ.பி. மத்திய அரசு வழங்கும் வரி வருவாயைவிட 4 மடங்கு அதிகமாக வரி பகிர்வு அந்த மாநிலத்துக்குக் கொடுக்கப்படுகிறது என்பதையும் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கூறியிருந்தது நினைவூட்டத்தக்கது.

ஒரு நிதியாண்டில், மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம், அனைத்து மாநிலங்களுக்கும் 14 தவணைகளில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

எக்கச்சக்க ஆஃபர் இருக்கு... ஆனா ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது 5 விஷயத்துல எச்சரிக்கையா இருக்கணும்!

click me!