Third Party Motor Insurance : டூவீலர்,கார் வெச்சிருக்கிங்களா! இன்சூரன்ஸ் ப்ரீமியம் உயர்கிறது

Published : Mar 07, 2022, 01:06 PM ISTUpdated : Mar 07, 2022, 01:12 PM IST
Third Party Motor Insurance : டூவீலர்,கார் வெச்சிருக்கிங்களா!  இன்சூரன்ஸ் ப்ரீமியம் உயர்கிறது

சுருக்கம்

Third Party Motor Insurance: இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கான தேர்டுபார்டி இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கான தேர்டுபார்டி இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தேர்டு பார்டி இன்சூரன்ஸ் என்பது இருசக்கர வாகனங்கள், கார்கள், பயணிகள் வாகனம், சரக்குவாகனங்கள் என அனைத்தும் எடுப்பது கட்டாயமாகும். இந்த காப்பாடு வாகனத்துக்கு அல்லாமல், வாகனம் யார்மீதாவது மோதி அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ உயிரிழப்பு ஏற்பட்டாலோ வழங்கப்படும் காப்பீடு தொகையாகும். ஆதலால் தேர்டு பார்டி இன்சூரன்ஸ் கட்டாயம் அனைத்து வாகனங்களும் எடுக்க வேண்டும்
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

இதன்படி 1000சிசிக்கான தேர்டுபார்டி இன்சூரன்ஸ் தற்போது ரூ.2,072 ஆகஇருக்கும் நிலையில் இது ரூ.2,094 ஆகவும், 1000சிசி முதல் 1500 வரை தற்போது ரூ,3,211 லிருந்து ரூ,3416ஆக அதிகரிக்கும். 1500சிசிக்கும் அதிகமான திறன்கொண்ட கார்களுக்கு தற்போது இன்சூரன்ஸ் ரூ,7,890 ஆக இருக்கும் நிலையில், ரூ,7897ஆக அதிகரிக்கும். 

இருசக்கரவாகனங்களில் 150சிசிக்கு அதிகமானவே அதேசமயம், 350சிசிக்கு குறைவானவற்றுக்கு ப்ரீமியம் தொகை ரூ.1,366 ஆகவும், 350சிசிக்கு அதிகமான பைக்களுக்கு ப்ரீமியம் ரூ.2,804ஆகவும் அதிகரிக்கும்.

இந்தத் திருத்தப்பட்ட ப்ரீமியம் தொகை வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல் நடைமுறைக்குவரலாம். பேட்டரிக்கார், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், பேட்டரி சரக்குவாகனங்கள் ஆகியவை 7.5 சதவீதம் தேர்டுபார்டி காப்பீடு செலுத்த வேண்டும் எனத் தெரிகிறது.

30கிலோவாட்டுக்கு மிகாமல் இருக்கும் பேட்டரி காருக்கு ரூ,1,780, 30கிலோவாட்டுக்கும் அதிகமாக 65கிலோவாட்டுக்கு குறைவாக இருக்கும் கார்களுக்கு ரூ.2,904 ப்ரீமியமாகச் செலுத்த வேண்டியதிருக்கும்.

12 டன்னுக்கு அதிகமாக, 20 டன்கள் வரை சுமை ஏற்றும் கனரக வாகனங்களுக்கு(லாரி,டாரஸ்) தர்போது ரூ,33,414 ப்ரீமியம் செலுத்த வேண்டும், இது ரூ.35,313 ஆகஅதிகரிக்கும்.

40டன்னுக்கு அதிகமாக சுமை ஏற்றும் கனரக வாகனங்கள் தற்போது ரூ.41,561 ப்ரீமியமாகச் செலுத்துகிறார்கள். இது ரூ.44,242 ஆகஅதிகரிக்கும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!