ரூ.29 க்கு மத்திய அரசின் பாரத் அரிசி! 5 கிலோ, 10 கிலோ மூட்டைகளில் கிடைக்குது!

By SG BalanFirst Published Feb 7, 2024, 12:07 PM IST
Highlights

ரூ.29க்கு மத்திய அரசு விற்கும் பாரத் அரிசியை 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளாக வாங்கலாம். ஏற்கெனவே பாரத் அட்டா கிலோ ரூ.27.50க்கும், பாரத் சனா ரூ.60க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சில்லறை அரிசி விலை 15 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோரின் சுமையை குறைக்கும் வகையில், கிலோவுக்கு ரூ.29 விலையில் 'பாரத் அரிசி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மானிய விலையில் வழங்கப்படும் பாரத் அரிசியை 5 கிலோ மற்றும் 10 கிலோ மூடைகளில் வாங்கலாம் என உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை பாரத் அரிசி விற்பனையைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலைகள் விரைவாகக் குறைக்கப்பட்டன என்றும் நினைவுகூர்ந்தார். "பாரத் அட்டா என்ற பெயரில் கோதுமையை விற்கத் தொடங்கியதிலிருந்து கடந்த ஆறு மாதங்களில் கோதுமை பணவீக்கம் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. அதே விளைவை அரிசியிலும் பார்க்கலாம்" என மத்திய அமைச்சர் கூறினார்.

நடுத்தர வர்க்க மக்களின் தேவைக்கு கைகொடுக்கும் இந்தப் பொருட்களின் விலை மிகவும் நிலையானது என்றும் அவர் வலியுறுத்தினார். "மலிவு விலையில் அன்றாட தேவைக்கான பொருட்களை வழங்குவதில் அரசாங்கம் முனைப்புடன் உள்ளது" என அமைச்சர் கோயல் கூறினார்.

25 மில்லியன் டாலர் போச்சு... ஜூம் மீட்டிங்கில் டீப்ஃபேக் மூலம் நடந்த மெகா மோசடி!

நிகழ்ச்சியில் 'பாரத் அரிசி' விற்பனை செய்யும் 100 நடமாடும் வேன்களையும் அமைச்சர் பியூஷ் கோயல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். விற்பனையைத் தொடங்கி வைக்கும் விதமாக ஐந்து பயனாளிகளுக்கு 5 கிலோ பாரத் அரிசி மூட்டைகளையும் வழங்கினார்.

முதல் கட்டமாக இந்திய உணவுக் கழகம் (FCI) 5 லட்சம் டன் பாரத் அரிசியை நபார்டு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மூலம் விற்பனை செய்ய உள்ளது. இந்த அரிசியை 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளாக வாங்கலாம்.

ஏற்கெனவே பாரத் அட்டா கிலோ ரூ.27.50க்கும், பாரத் சனா ரூ.60க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதைபோல, ‘பாரத் அரிசி’க்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது.

பாரத் பிராண்ட் பொருட்கள் பற்றி தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மத்திய அமைச்சர் கோயல், 'பாரத் தால்' மற்றும் 'பாரத் அட்டா' ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டுமே சுவையானவை என்றும் கூறினார். "இப்போது, நான் 'பாரத் அரிசி' வாங்கியுள்ளேன். இதுவும் தரமானதாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரிக்குப் பிறகு பேடிஎம் FASTag வேலை செய்யுமா? KYC பதிவுக்கு அவகாசம் இருக்கா?

click me!