“கூகிள் மேப் மட்டும் போதும்”” அடுத்த நொடியே வந்து நிற்கும் ஓலா, உபெர் கால் டாக்ஸி....!!! 

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 07:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
“கூகிள் மேப் மட்டும் போதும்”” அடுத்த நொடியே வந்து நிற்கும் ஓலா, உபெர் கால் டாக்ஸி....!!! 

சுருக்கம்

“கூகிள் மேப் மட்டும் போதும்”” அடுத்த நொடியே வந்து நிற்கும் ஓலா, உபெர் கால் டாக்ஸி....!!! 

எந்த  நேரத்தில் வந்தாலும், பயம் இல்லாமல் நம் வீட்டு வாசலிலேயே  இறங்க  இப்ப நிறைய கால் டேக்ஸி   வந்து விட்டது.  

அதாவது பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக கூகுள் தேடல் மூலமே ஓலா, உபெர் கால் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தி பயண முன்பதிவு  செய்ய  முடியும் என்று,கூகுள் தெரிவித்துள்ளது.

கூகிள்  மேப்பின் மூலமாகவே, இனி ஸ்மார்ட்போன் பயனாளிகள் தங்களின் மொபைல் தேடுபொறி மூலம், அடைய வேண்டிய இடம், என்ன வகையான சேவை தேவை என்பது குறித்த விவரங்களை இனி கூகுள் வழியாகவே  தேர்ந்தெடுத்து  பயன்படுத்த  முடியும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியில் பயணிகள் ஓலா மற்றும் உபெர் ஆகிய இரண்டுக்குமான பயண சேவை வகைகள், கட்டண விவரங்கள் மற்றும் வாகனம் வந்து சேரும் நேரம் உள்ளிட்டவைகளை எளிதில்  தெரிந்து கொள்ள முடியும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உபெரிலோ, ஓலாவிலோ ''இருப்பிடத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை'' என்று குறிப்பிட்டால், கூகுள் தேடுதல் மூலம் ஒரே கிளிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிக்குச் சென்று பயண முன்பதிவு செய்ய முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த  அனைத்து   தகவலையும் கூகுள் திட்ட மேலாளர் சங்கேத் குப்தா தெரிவித்துள்ளார் .

 

 

 

 

       

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!