gold rate today: பொன்னான நேரம்! ஆபரணத் தங்கம் சவரணுக்கு 280ரூபாய் குறைந்தது

By Pothy RajFirst Published Jun 1, 2022, 12:06 PM IST
Highlights

gold rate today:  தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தநிலையில் இன்று ஆபரணத் தங்கம் சவரணுக்கு ரூ.280 குறைந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.97 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தநிலையில் இன்று ஆபரணத் தங்கம் சவரணுக்கு ரூ.280 குறைந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.97 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த இரு வாரங்களாக இறங்கு முகத்தில் இருப்பதால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும், தங்க நகைகள் வாங்கவும் இது சரியான நேரம் என்று முதலீட்டாளர்கள் ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு  ரூ.10 குறைந்து, ரூ.4,775க்கு விற்பனையானது, சவரண் ரூ.38,200க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்தது ரூ.4740 ஆகவும், சவரணுக்கு, ரூ.280 குறைந்து, ரூ.37,920க்கும் விற்பனையாகிறது. நீண்ட காலத்துக்குபின், தங்கம் விலை சவரண் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 

கடந்த மே 23-ம் தேதி 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4837க்கு விற்கப்பட்டது, சவரண் ரூ.38,696 க்கு உயர்ந்தது. ஆனால், அதன்பின் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.97 குறைந்துள்ளது, சவரணுக்கு, ரூ.776 குறைந்துள்ளது. 

வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 பைசா நேற்று அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதன்படி, வெள்ளி கிராம் ரூ.67 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.67,000க்கு விற்பனையாகிறது. ஏறக்குறைய கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது.

கடந்த மே 28ம் தேதி முதல் 30ம் தேதிவரை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.67ஆகவும், கிலோ ரூ.67000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ரூ.500 அதிகரித்து, இன்று ரூ.500 குறைந்துள்ளது. 

click me!