PMJJBY:PMSBY: பிரதமர் ஜீவன் ஜோதி, பிமா யோஜனா காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்ந்தது : முழு விவரம்

Published : Jun 01, 2022, 10:02 AM IST
PMJJBY:PMSBY: பிரதமர் ஜீவன் ஜோதி, பிமா யோஜனா காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்ந்தது : முழு விவரம்

சுருக்கம்

The government  raised the premium for  Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) and Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா(PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஸா பிமா யோஜனா(PMSBY) காப்பீடு திட்டங்களுக்கான ப்ரீமியம் கட்டணங்களை மத்தியஅரசு உயர்த்தியுள்ளது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா(PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஸா பிமா யோஜனா(PMSBY) காப்பீடு திட்டங்களுக்கான ப்ரீமியம் கட்டணங்களை மத்தியஅரசு உயர்த்தியுள்ளது.

எவ்வளவு உயர்ந்தது

இதன்படி பிரதமர் ஜீவன் ஜோதி பிமா யோஜனா காப்பீடு திட்டத்துக்கான ப்ரீமியம் தினசரி ரூ.1.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஆண்டுக்கு ரூ.330 செலுத்திவந்த ப்ரீமியம் கட்டணம் இனிமேல் ரூ.436ஆக அதிகரிக்கும்.

அதேபோல பிரதமர் சுரக்ஸா பிமா யோஜனா காப்பீடு திட்டத்துக்கான ப்ரீமியம் கட்டணம் ரூ.12 முதல் ரூ.20 அதிகரித்துள்ளது. இந்தபுதிய ப்ரீமியம்கட்டணங்கள் ஜூன் 1ம்தேதி(இன்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் ஜீன் ஜோதி காப்பீடு திட்டத்துக்கு 32 சதவீதமும், சுரக்ஸா பிமா யோஜானா திட்டத்துக்கு 67 சதவீதமும் கட்டணம் உயர்ந்துள்ளது.

எத்தனை பேர்

2022, மார்ச் 31ம் தேதிவரை ஜீவன் ஜோதி பிமா யோஜா காப்பீடு திட்டத்தில் 6.40 கோடி மக்களும், பிரதமர் சுரக்ஸா பிமா யோஜனா காப்பீடு திட்டத்தில் 22 கோடி மக்களும் இணைந்துள்ளனர்.

இழப்பீடு 

பிரதமர் சுரக்ஸா பிமா யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.1,134 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. காப்பீடு பெற்றவர்களுக்கு 2022, மார்ச் 31ம் தேதிவரை ரூ.2,513 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஜீவன் ஜோதி பிமா யோஜனா திட்டத்தில் 2022, மார்ச் 31ம் தேதிவரை ரூ.9,737 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, இழப்பீடாக ரூ.14ஆயிரத்து 144 கோடி வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு பெற்றவர்கள் உயிரிழப்பைச் சந்திக்க நேர்ந்தால் அவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அனைத்தும் நேரடி வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கு

பிரதமர் மோடியின் நோக்கத்தின்படி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் காப்பீடு பெற வேண்டும் என்பதாகும். இதன்படி, ஜீவன் ஜோடி பிமா யோஜனா திட்டத்தில் ரூ.6.40 கோடி இருந்த காப்பீடுதாரர்கள் எண்ணிக்கை 15 கோடியாக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சுரக்ஸா பிமா யோஜனா திட்டத்தில் காப்பீடு தாரர்கள் எண்ணிக்கையை 22 கோடியிலிருந்து 37 கோடியாக அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இணையலாம்

ஜீன்ஜோதி பிமா யோஜனா திட்டத்தில் இணைந்த 18 முதல் 50 வயது நிரம்பிய ஒருவர் உயிரிழப்பை சந்தித்தால், அவரின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம்இழப்பீடு  வழங்கப்படும். வங்கிக்கணக்கு, அஞ்சலகத்தில் வங்கிக்கணக்கு வைத்திருந்தால், இந்தத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் சேரலாம்.

பிரதமர் சுரக்ஸா பிமா யோஜனா திட்டத்தின் காப்பீடு பெற்ற ஒருவர் உயிரிழப்பைச் சந்தித்தால் அவரின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், விபத்தில் ஏதேனும் சிக்கினால் அவருக்கு ரூ.ஒருலட்சம் இழப்பீடும் வழங்கப்படும். இந்தத்திட்டத்தில் 18 முதல் 70 வயதுள்ளவர்கள் சேரலாம். வங்கிக்கணக்கு, அஞ்சலத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இதில் சேரலாம்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?