gold rate today chennai : தங்கம் விலை கிராமுக்கு எவ்வளவு உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Jun 6, 2022, 10:20 AM IST
Highlights

gold rate today chennai : gold rate today: chennai gold rate: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 10 ரூபாயும், சவரணுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

gold rate today chennai : gold rate today: chennai gold rate: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 10 ரூபாயும், சவரணுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,775க்கும், சவரண் ரூ.38 ஆயிரத்து 200க்கும் விற்பனையானது.

ஆனால், இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,785 ஆக உயர்ந்துள்ளது.  சவரணுக்கு, ரூ. 80 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் கிராமுக்கு ரூ.10 முதல் ரூ30 வரை  ஏற்ற இறக்கத்துடன் இருந்து  வருகிறது.  ரொக்கமாக மாற்றக்கூடிய வகையில் இருக்கும் உலோகமான தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க வட்டிவீதம் உயர்வு போன்றவற்றால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மாறுபாடு இருக்கும் எனத் தெரிகிறது

கடந்த மே 29-ம் தேதியிலிருந்து ஜூன் 6ம் தேதிவரை 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்து 775 முதல் ரூ.4 ஆயிரத்து 785க்குள் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. இதில் கடந்த 3ம் தேதி மட்டும் ரூ.4 ஆயிரத்து 800க்கும் மேல் அதிகரித்தாலும் அடுத்தநாளே சரிந்தது.

வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.68.50 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.68,500க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்துள்ளது.
கடந்த மே 28ம் தேதி முதல் ஜூன்6ம் தேதிவரை வெள்ளி விலையும் ரூ.1500க்குள்ளாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது
 

click me!