
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றும் காணப்படவில்லை. அதேபோல் வெள்ளியின் விலையிலும் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை மதுரை, கோவை மற்றும் நெல்லையில் ஒரு கிராம் 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை 1 கிராம் 114 ரூபாய்க்கு விற்பனையானது.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை சர்வதேச சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படாத நிலையில், ஆசிய கமாடிட்டி சந்தைகளில் மாறுதல்கள் இல்லாமல் இருந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படாமல் இருந்தது. தங்கம் விலையில் ஏற்றம் இல்லை என்று தெரிந்ததும் நடுத்த வர்க்கத்தினர் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டியதால் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள நகை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73 ஆயிரத்து 40 ரூபாயாகவும் உள்ளது. அதேபோல் வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் 114 ரூபாயாக உள்ளது. மதுரை, கோவை, நெல்லை மற்றும் திருச்சியிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது.
சமீபகாலமாக வெள்ளி மற்றும் வெள்ளி பொருட்களில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறும் தங்க நகை வியாபாரிகள், வெள்ளி விலை பெரிய மாற்றம் இல்லாமல் உள்ளதால் அதில் முதலீடு செய்ய இது ஏற்ற காலம் என்று தெரிவித்துள்ளனர். வெள்ளி ஆபரணங்கள் வாங்க முடியாதவர்கள் வெள்ளி நாணயங்களை வாங்கி சேகரிக்கலாம் எனவும் அவர்கள் கூறிகின்றனர். வரும் வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய ஏற்ற இறங்கம் இருக்காது என கூறும் விற்பனையாளர்கள், காத்திருந்து தங்கம் வெள்ளி விலை குறையும் தருணத்தில் வாங்கினால் நல்லது என அறிவுறுத்துகின்றனர்.
வியாழக்கிழமை தங்கம் விலை 320 ரூபாய் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் மாற்றம் இல்லாமல் உள்ளது. அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லாமல் 1 கிராம் 114 ரூபாயாக இருப்பதால் விற்பனை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 73 ஆயிரத்து 40 ரூபாயாகவும், 1 கிராம் 9 ஆயிர்தது 130 ரூபாயாகவும் உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.