தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு: இதுதான் சரியான சான்ஸ்!

By Manikanda Prabu  |  First Published Oct 4, 2023, 3:15 PM IST

தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்


ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம்தான் முக்கிய சேமிப்பாக இருக்கிறது. பங்குச்சந்தை, மியூசுவல் ஃபண்ட் என எவ்வித விவரமும் அறியாதவர்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்கின்றனர். இக்கட்டான காலகட்டத்தில் தங்கத்தை வைத்து பணமாக்கிக் கொள்ளலாம். எனவே, பெரும்பாலானோர் தங்கத்திலேயே தங்களது முதலீடுகளை அதிகமாகச் செய்கின்றனர்.

அதேபோல், தங்கமும் எப்போதும் அவர்களை கைவிடுவதில்லை. பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், தங்கம் எப்போதும் ஏறுமகாகவே இருக்கிறது. ஆனால், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கொரோனா காலகட்டத்துக்கு முன்பு குறைவாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை கொரோனாவுக்கு பின்னர் மளமளவென அதிகரித்தது. அதன்பிறகு, மீண்டும் குறைந்து படிப்படியாக அதிகரித்த தங்கத்தின் விலை கடந்த சில குறைந்து வருகிறது.

Latest Videos

undefined

இன்று மட்டும், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,285க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,040க்கு விற்பனையாகிறது.

இந்த விலை குறைவுக்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக வெளியாகியிருக்கும் தகவலாலேயே தங்கத்தின் விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கும் போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதேபோல், அவர்கள் வட்டியை அதிகரிக்கும் போதெல்லாம் தங்கத்தின் விலை குறையும்.

ஆசிரியர்கள் போராட்டம்: தமிழக அரசு எடுக்கும் முடிவு!

இந்தநிலையில், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த போகிறது. இதனால் தங்கம் விலை குறையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உயர்த்த தங்கத்தின் விலை மேலும் குறையும். அடுத்த 12 முதல் 18 மாதங்கள் தங்கம் விலை நிச்சயமாகத் தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4800 வரை செல்ல வாய்ப்புள்ளது. இறங்க இறங்கத் தங்கத்தைத் தாராளமாக வாங்கலாம். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போதுதான் தங்கம் விலை அதிகரிக்கும்.” என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், அமெரிக்காவிலும் தங்கத்தின் விலை குறையும். ஆனால், அமெரிக்க டலாருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருவதால் வெளிநாடுகளில் தங்கம் விலை குறையும் அளவுக்கு, இந்தியாவிலும் தங்கம் விலை குறையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!