இப்பவே நகை வாங்கிடுங்க.. தங்கம் விலை அடுத்த ஆண்டு புதிய உச்சம் தொடும்.. ஆனந்த் சீனிவாசன் கணிப்பு..

Published : Dec 27, 2023, 01:37 PM IST
இப்பவே நகை வாங்கிடுங்க.. தங்கம் விலை அடுத்த ஆண்டு புதிய உச்சம் தொடும்.. ஆனந்த் சீனிவாசன் கணிப்பு..

சுருக்கம்

வரும் மாதங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி உள்ளார்

தங்கம் என்பது ஆடம்பர் பொருள் என்பதை தாண்டி அவசர காலத்தில் கைகொடுக்கும் பொருளாகவும் உள்ளது. இதன் காரணமாகவே நடுத்தர மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். வீடு, மற்ற சொத்துக்களை பணமாக மாற்றுவது மிகவும் கடினம்..

ஆனால் தங்கத்தை எளிதில் பணமாக மாற்றி விடலாம். பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் கூட நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சுமார் 400 கிராம் தங்கம் இருக்க வேண்டும் என்பதே அவரின் அட்வைஸ்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ இந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் பெற்றிருப்பார்கள்.. தங்கம் விலை வரும் மாதங்களில் எப்படி இருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் உயரும். ஒரு கிராம் தங்கம் குறைந்தது ரூ.7000 முதல் ரூ.7500 வரை செல்லும்.

எனவே உங்களால் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம். சந்தை மதிப்பு திடீரென இறங்கிவிடும் என்று அப்போது தங்கம் வாங்கலாம் என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து தங்கம் மீதான முதலீட்டை கவனத்தில் கொள்ளலாம். ” என்று தெரிவித்தார்.

 

தங்க ஆஃபர்: தங்கம் வாங்கினால் ரூ. 500 தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க..

தங்கத்தை பொறுத்த வரை, இதுதான் குறைந்தபட்ச விலை என்று யாராலும் உறுதியாக கணிக்கவே முடியாது. தங்கம் விலை என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே தங்கம் விலை குறையும் போது வாங்கலாம் என்று காத்திருந்தால் உங்களால் எது குறைந்தபட்ச விலை என்பதை கண்டுபிடிக்க முடியாது. எனவே நீங்கள் தங்கம் வாங்கவே முடியாத சூழல் ஏற்படலாம். இதன் காரணமாகவே அவர் இப்போது முதலே தங்கம் வாங்க சொல்கிறார்.

மறுப்பு : இந்த செய்தி தகவல் நோக்கத்திற்காக கொடுக்கப்பட்து. இதை முதலீடு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முதலீடு செய்யும் முன்பு பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை பெற்ற பிறகு முடிவெடுக்கலாம்..

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Rate: ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.! எப்போ குறையும்!
WhatsApp Update: அப்பாடா, இனி யாருக்கும் தெரியாது.! நிம்மதி பெருமூச்சு விடும் பயனாளர்கள்.!