கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே சென்னையில் தங்கத்தின் விலை சீராக உள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில் நகைகளுக்கு அதிக தேவையும், தங்க பிஸ்கட் மற்றும் தங்க நாணயங்களின் தேவை குறைவாகவும் உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே, ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.47,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
IPL 2024: ரூ. 100 கோடிக்கு வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா? ஐபிஎல் நிர்வாகம் என்ன சொல்கிறது?
undefined
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 8 கிராம் ரூ.1.60 அதிகரித்து ரூ.645க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் தலைதூக்கும் புதியவகை கொரோனா பரவல்; தடுப்பூசி அவசியமா? மத்திய அரசு விளக்கம்