
சர்வதேச சந்தை விலை காரணமாக நேற்று சற்று குறைந்தது தங்கத்தின் விலை. ஆனால் இன்றோ ஷாக் கொடுக்கும் விதத்தில் கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் (22 காரட்) நேற்றைய விலையான 4,545 ரூபாயில் இருந்து 49 ரூபாய் உயர்வு கண்டு 4,594 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் (22 காரட்) 392 இரண்டு ரூபாய் உயர்ந்து 36,752 ரூபாயாக உள்ளது. இந்த கிடு கிடு உயர்வு வாடிக்கையாளர்களை, குறிப்பாக தை மாதம் முதல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை, நேற்று 4,959 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கிராமுக்கு 53 ரூபாய் உயர்வு கண்டு 5012 ரூபாயாக விற்பனையாகிறது. அதுவே ஒரு சவரன் தங்கத்தின் இன்றைய விலை 424 ரூபாய் உயர்ந்து 40,096 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கின்றது. நேற்றைய ஒரு கிராம் வெள்ளியின் விலையான 65 ரூபாய் 10 பைசாவில் இருந்து 80 பைசா உயர்ந்து 65 ரூபாய் 90 காசாக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 800 ரூபாய் உயர்ந்து 65,900 ரூபாய்க்கு வர்தகமாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.