gold price india: இந்தியர்கள் திடீர்னு இப்படி குறைச்சுட்டாங்க! முதல்காலாண்டில் தங்கத்தின் தேவை சரிவு

Published : Apr 28, 2022, 03:00 PM IST
 gold price india: இந்தியர்கள் திடீர்னு இப்படி குறைச்சுட்டாங்க! முதல்காலாண்டில் தங்கத்தின் தேவை சரிவு

சுருக்கம்

gold price india : 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது, விலை அதிகம், குறைந்த அளவு பண்டிகை நாட்களால் தங்கத்தின் தேவை சரிந்துள்ளது.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது, விலை அதிகம், குறைந்த அளவு பண்டிகை நாட்களால் தங்கத்தின் தேவை சரிந்துள்ளது.

2022ம் ஆண்டு முதல்காலாண்டில் தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிந்து, 135.50 டன்னாகக் குறைந்துள்ளது. தங்க நகைகளின் தேவை 26 சதவீதம் குறைந்து, 94.20 டன்னாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

உலகளவில் தங்கத்தின் தேவை 34 சதவீதம் அதிகரித்து 1,234 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல்காலாண்டுக்குப்பின் இப்போதுதான் அதிகமாகும். அதிகமான முதலீடு, சர்வதேச சூழல் பதற்றம் ஆகியவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால்  தேவை அதிகரி்த்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரை முதலீட்டு அடிப்படையில் தங்கத்தின் தேவை சிறிதளவு அதிகரித்து 3 டன்னாக உயர்ந்துள்ளது. இந்தியர்களைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது, நகைகளாகவும், காசுகளாகவும் விற்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.55ஆயிரமாக அதிகரித்தது. 2022 ஜனவரியில் ரூ.49ஆயிரமாக இருந்தது.

2022ம் ஆண்டு மார்ச் காலாண்டுவரை பழைய தங்க நகைகளைக் கொடுத்து புதிய  நகைகள் வாங்குவது 27.80 டன்னாக அதாவது 88ச தவீதம் அதிகரி்த்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டுக்குப்பின் அதிகமாகும். 

உலக தங்கக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, “ 2022 ம்ஆண்டு முதல் காலாண்டில் உலகளழில் தங்கத்தின் நுகர்வு 7 சதவீதம் சரிந்து 474 டன்னாக இருக்கிறது. தங்கத்தின் நுகர்வு குறைந்ததற்கு முக்கியக் காரணம் இந்தியா, சீனாவில் தேவையில் ஏற்பட்ட குறைவுதான். உக்ரைன் ரஷ்யா போர் காரணிகளும் தங்கத்தின் விலையை உயர்த்தி, தேவையை அதிகரி்க்கவைத்தது. தங்கத்தின் விலை உயர்ந்ததால் மக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. 

தங்கக்கட்டி, காசுகளில் முதலீடு என்பது முதல் காலாண்டில் 20 சதவீதம் சரிந்து, 282 டன்னாகக் குறைந்துள்ளது. சீனாவில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது முதலீட்டிலும்பாதிப்பை ஏற்படுத்தியது.

வரும் மே3 ம்தேதி அக்சய திருதிய நாள் வருகிறது. அன்றைய தினம் மக்கள் தங்கம் வாங்குவதை புனிதமாகக் கருதுகிறார்கள். ஆதலால் அக்சய திருதியை அன்று தங்கத்தின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த வாரம் 4 நாட்கள் வங்கி விடுமுறை.. தேதிகளை மறக்காம நோட் பண்ணுங்க மக்களே
Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!