pm modi chidambaram : பிரதமர் மோடி பேசும்போதா இப்படி அறிவிப்பை நிதிஅமைச்சகம் வெளியிடணும்: ப.சிதம்பரம் கிண்டல்

By Pothy RajFirst Published Apr 28, 2022, 2:15 PM IST
Highlights

pm modi chidambaram : பிரதமர் மோடி மாநிலங்களை விமர்சித்து பேசும் அன்றைய தினத்திலா, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்து தர்மசங்கடப்படுத்த காரணம் என்ன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி மாநிலங்களை விமர்சித்து பேசும் அன்றைய தினத்திலா, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்து தர்மசங்கடப்படுத்த காரணம் என்ன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

ஜிஎஸ்டி நிலுவை

மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலில் மாநிலங்களுக்கு கடந்த மார்ச் மாதம்வரை 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. போதுமான நிதிஇல்லாததால், இன்னும் ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி செஸ் நிதி மாநிலங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தது.

ஆனால், பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் பேசுகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் சில மாநிலங்கள் உள்ளன என்று தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

பிரதமர் மோடி விமர்சனம்

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் “பெட்ரோல் டீசல் மீதான வரிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உற்பத்தி வரியைக் குறைத்தது. மத்திய அரசு வரிக்குறைப்பு செய்தது போன்று மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தினோம். சில மாநிலங்கள் வரியைக் குறைத்து ,அதன்பலனை நுகர்வோர்களுக்கு வழங்கின. பல மாநிலங்கள் வரியைக் குறைக்கவில்லை.

மகாராஷ்டிரா, மே.வங்கம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு  ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரைகளை பின்பற்றவில்லை. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியையும் குறைக்கவில்லை. இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும்,விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்படுகிறார்கள்”எனத் தெரிவித்தார்

நிதிஅமைச்சகம்
பிரதமர் மோடி மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு சுமத்திய நேற்று மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு ரூ.78ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி நிலுவை இருக்கிறது என்று அறிவிப்பு வெளியிட்டு தர்மசங்கடப்படுத்தியது.

சிதம்பரம் கிண்டல்

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பர் மத்திய நிதி அமைச்சகத்தை கிண்டல் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடி நேற்றுதான் மாநில அரசுகள்  பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவில்லை என்று விமர்சித்துப் பேசினார் .அதேநாளில், நிதிஅமைச்சகம், மாநில அரசுகளுக்கு ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி வரி நிலுவையாக தரவேண்டியுள்ளது என்று கூறி சங்கடப்படுத்தியது ஏனோ

உண்மையில் அதிகமான நிதி தருவதற்கு மத்திய அரசு கடன்பட்டுள்ளது. நீங்கள் கூடுதலாக தொகையைச் சேர்த்தால், மாநிலங்களுக்கும் அதிகமாகத் தரவேண்டியதிருக்கும், ஒட்டுமொத்த கூட்டுத்தொகை பெரிதாகக்கூட இருக்கலாம். மத்திய அரசின் தலைமைகணக்குத் தணிக்கையாளருக்கு மட்டுமே சரியானத் தொகை தெரியும். 

ஆனால் இதில் ஸ்வரஸ்யமான விஷயம் என்னவென்றால், மாநிலங்களை விமர்சிக்க பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த நாளில் ஏன் நிதிஅமைச்சகம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வெளியி்ட்டு தர்மசங்கடப்படுத்தியது என்பதுதான் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

click me!