
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. தங்கம் இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,700 ஆகவும், சவரன், ரூ.37,600 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை சற்று உயர்வு! சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் செவ்வாய்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5 ரூபாய் அதிகரித்து, ரூ.4,705ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.40 ஏற்றம் கண்டு, ரூ.37,640ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,705க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதிலிருந்து ஏற்றத்துடனே காணப்படுகிறது. கடந்த வாரத்தின் பெரும்பகுதி நாட்கள் தங்கம் விலை ஊசலாட்டத்துடன், விலை குறைந்தநிலையில் இந்த வாரம் அதிகரித்து வருகிறது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆசை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை திடீர் வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அமெரி்க்காவில் வட்டிவீதம் உயர்த்தப்படும்போது, டாலர் மதிப்பு வலுப்பெற்று உலக நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரியத் தொடங்கும்.
இது இந்திய ரூபாய் மதிப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும், தங்கத்தின் தேவையை சர்வதேச அளவில் குறைக்கும். அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தங்கம் விலையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
தங்கம் விலை மீண்டும் குறைவு! சவரனுக்கு ரூ.200 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 10 பைசா அதிகரித்து, ரூ.61.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.61,800 ஆகவும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.