தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது, தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது, தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.160 சரிந்துள்ளது.
காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,745 ஆகவும், சவரன், ரூ.37,960 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.4,725ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 சரிந்து, ரூ.37,800ஆக குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,725ஆக விற்கப்படுகிறது.
சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிக்கை
தங்கம் விலை தொடர்ந்து 2வது வாரமாக கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. கடந்த 5ம் தேதி முதல் இன்று வரை தங்கம் கிராம் ஒன்று ரூ.4725 முதல் ரூ.4,768 வரை அதிகரித்தும், குறைந்துமே இருக்கிறது. ஏறக்குறைய 45 ரூபாய் வேறுபாட்டில் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.
தங்கம் விலையில் கடந்த வாரம் ஏற்பட்ட சரிவு இந்த வாரத்திலும் தொடர்ந்து வருகிறது. தங்கம் கிராம் ஒன்றுக்கு நேற்று ரூ.15, இன்று காலை ரூ.20 குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி! 158 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஏன்?
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ.62.40ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.62,400 ஆகவும் உயர்ந்துள்ளது