crude oil price: கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி! 158 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஏன்?

By Pothy Raj  |  First Published Sep 12, 2022, 11:49 AM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில்இல்லாத வகையில் குறைந்த நிலையிலும்கூட, பெட்ரோல், டீசல்விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் தொடர்ந்து 158 நாட்களாக அதே விலையில் வைத்துள்ளன.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில்இல்லாத வகையில் குறைந்த நிலையிலும்கூட, பெட்ரோல், டீசல்விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் தொடர்ந்து 158 நாட்களாக அதே விலையில் வைத்துள்ளன.

உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் பேரல் 90 டாலர்களாகக் குறைந்தது. கடந்த பிப்ரவரி மாதத்துக்குப்பின் இந்த அளவு குறைந்தது இதுதான் முதல்முறை. அதன்பின் வர்த்தகத்தின் போது பேரல் 92 டாலர் அளவு உயர்ந்தது.

Tap to resize

Latest Videos

சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிக்கை

ரஷ்யாவும் நார்த் ஸ்ட்ரீம் பைப்லைன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவும், ஒபேக் நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவும் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து விலை குறைந்தது.கச்சா எண்ணெய் விலை100 டாலர்களுக்கும் கீழ் சரிந்தபோதிலும் இன்னும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளன.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங்பூரியிடம் நிருபர்கள் கேட்டபோது, “ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தபோதிலும்கூட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் இருந்தன. நம்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தது. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும். இந்த இழப்பிலிருந்து இன்னும் எண்ணெய் நிறுவனங்கள் மீளவில்லை” எனத் தெரிவித்தார்

காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

செப்டம்பர் 8ம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் இறக்குமதி பேரலுக்கு 88 டாலராகும். ஏப்ரல் மாத சராசரி என்பது பேரல் 102.97 டாலர், மே மாதத்தில் பேரல் 109.51 டாலர், ஜூன் மாதத்தில் பேரல் 116.01 டாலராகும். ஆனால், இந்திய சந்தையில் சராசரியாக பேரல் 105.49 டாலராக இருந்து செப்டம்பரில் குறைந்துள்ளது. ்தாவது ஆகஸ்டில் பேரல் 97.10 டாலராகவும், செப்டம்பரில் பேரல் 92.87 டாலராகவும் சரிந்தது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாலம் கடந்த 158 நாட்களாக அதே விலையில் நீடிக்கிறது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கினங்கள் பிபிசிஎல், ஹெச்பிசிஎல், ஐஓசி ஆகிய நிறுவனங்கள் தங்கள் விலை உயர்த்தும் உரிமையை செயல்படுத்தாமல் உள்ளன. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப விலையை மாற்றமுடியவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.20 முதல் 25, டீசலில் லிட்டருக்கு ரூ.14 முதல் 18ரூபாய் வரைஇழப்பு ஏற்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்தவிட்டதால், இந்த இழப்பும் குறைந்திருக்க வேண்டும் அல்லதுஇழப்பிலிருந்து மீண்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரை பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் 158 நாட்களாக அதே விலையில் எண்ணெய் நிறுவனங்கள் வைத்துள்ளன.

காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் “ பெட்ரோல் உற்பத்தியில் ஏற்படும் இழப்பிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் முழுமையாக மீளவில்லை. டீசல் இழப்பிலிருந்து மீள்வதற்கு சில மாதங்கள் ஆகும். கடந்த 5 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி விலைக்கும் குறைவாகத்தான் பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருகின்றன. பேரல் 88 டாலர் அல்லது அதற்கும் கீழ் குறைந்தால் மட்டும்தான் ஓரளவுக்கு இழப்பிலிருந்து மீள முடியும்” எனத் தெரிவித்தார்.

தற்போது டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.96.72, டீசல் லிட்டர் ரூ.89.62 என்ற விலையில் விற்கப்படுகிறது. 

click me!