தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,245ஆகவும், சவரன், ரூ.41,960ஆகவும் இருந்தது.
தங்கம் விலை அளித்த இன்ப அதிர்ச்சி| சவரன் ரூ.42 ஆயிரத்துக்குகீழ் சரிவு: நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூ.5,235ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 880ஆக வீழ்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,235க்கு விற்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை 5வது நாளாக இன்றும் சரிந்தது. இதுவரை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது நடுத்தர மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
அமெரிக்க பணவீக்கத்தைக் குறைக்க பெடரல் ரிசர்வ் மார்ச் மாதத்தில் வட்டியை 50 புள்ளிகள் உயர்த்த உள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குப்பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மதிப்பும் உயர்ந்துள்ளது,
முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான கவனத்தை குறைத்து, கடன்பத்திரங்கள் மீது திருப்பியுள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது, அதுமட்டும்லாமல் முகூர்த்த காலம் முடிந்தது, பண்டிகைக் காலம் முடிந்ததும் தங்கத்தின் தேவை குறையக் காரணமாகும்.
தங்கம் விலை நிலவரம்| நடுத்தர மக்களுக்கு நிம்மதி! வெள்ளி விலை என்ன?
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.50 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.70.90 ஆகவும், கிலோ ரூ.71,500 ஆக இருந்தநிலையில் கிலோவுக்கு ரூ.600 சரிந்து, ரூ.70,900 ஆகவும் வீழ்ச்ச்சி அடைந்துள்ளது.