காணிக்கையாக ரூ 16 லட்சத்தில் பட்டு வேஷ்டி  …..!!  உலக சாதனை படைத்தார் திருப்பதி ஏழுமலையான்..!

 
Published : Feb 20, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
 காணிக்கையாக  ரூ 16 லட்சத்தில் பட்டு வேஷ்டி  …..!!  உலக சாதனை படைத்தார்  திருப்பதி ஏழுமலையான்..!

சுருக்கம்

பட்டு வேஷ்டி காணிக்கை  ரூ 16 லட்சம்

ரூ 16 லட்சம் மதிப்பில், பட்டு வேஷ்டியை  பக்தர்  ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.  இந்த நிகழ்வு , உலக  சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது  குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இவர் 

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமாஞ்சுல ரெட்டி, இவரது மனைவி வெங்கட சுஜாதா ஆகியோர் ரூ.16 லட்சத்தில் தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியிடம் காணிக்கையாக வழங்கினர்.

எவ்வளவு  தேவைப்பட்டது ?

பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரத்தை தயாரிக்க ஒரு கிலோ தங்கம், வெள்ளி உபயோகப்படுத்தி  செய்யப்பட்டதாகவும், மேலும்  நடமாடும் வேன் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு அதற்குண்டான  தறி வேலைகளை செய்ததாகவும்   தெரிவித்துள்ளார்  .

சிறப்பு 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள் உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என அந்த அங்கவஸ்திரத்தில் எழுத்தை  நெய்ய  செய்ததாகவும் , 60 ஆயிரம் பேர் தறி நெய்ததால் இவை இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது என சதலவாடா கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். இந்த  பட்டு  வேட்டி  காணிக்கை  தற்போது,  உலக சாதனை புத்தகத்தில் இடம்  பிடித்து இருப்பது, மக்களிடையே  பெரிதும் ஆச்சர்யத்துடன் பேசப்பட்டு வருகிறது  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!