
தங்கத்திற்கு தடை விதிப்பாரா மோடி.....? நடுங்கும் வியாபாரிகள்.....!!!
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது சென்று சமீபத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி, தங்கம் வாங்கி குவித்துள்ளனர் நம் மக்கள். இதன் விளைவாக தங்கம் வாங்குபவர்களின் ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது.....
தற்போது தங்கம் வாங்குவதன் மூலம், தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு தங்கத்தின் இறக்குமது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதனை தடுக்கு பொருட்டு , மோடியின் அடுத்த நடவடிக்கையாக , வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தடை விதிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி தங்க வியாபாரிகள் மத்தியில் ...லைட்டா வயிற்றை கலக்கி வருவதாக தெரிகிறது......
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.