
ஆவடியில் கொட்டிக்கிடந்த 500 ,1000 ரூபாய்.. !!!! ஓடி வந்து அள்ளிகிட்டு போன பொதுமக்கள் ....!!!!
சென்னை ஆவடியில், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை, மைதானத்தில் கொட்டியுள்ளனர். அதாவது, ஆவடியில், ராணுவத்திற்கு சொந்தமான மைதானத்தில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக , நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் , ரூபாய் நோட்டுக்களை பார்த்து, ஆச்சர்ய அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் ஒரு சிலர், சில ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றதாக தெரிகிறது...... இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அந்த இடத்திற்கு படை எடுத்துள்ளனர்.
இந்த தகவலை , இதுவரை யாரும் காவல் துறைக்கு தெரிவித்ததாக தெரியவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. ....இந்த தகவலை போலீசாரும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.