அம்பானியை ஓரம் கட்டிய அதானி: ஆசியாவிலேயே இவர்தான் பணக்காரர்

By manimegalai aFirst Published Feb 8, 2022, 12:37 PM IST
Highlights

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், பணக்காரர் என்ற பெருமையை கவுதம் அதானி பெற்றுள்ளதாகப்  ப்ளூம்பெர்க் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், பணக்காரர் என்ற பெருமையை கவுதம் அதானி பெற்றுள்ளதாகப்  ப்ளூம்பெர்க் ஆய்வில் தெரியவந்துள்ளது.

துறைமுகங்கள், சுரங்கங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய தொழில்களில் ஆர்வம்காட்டி முதலீடு செய்துவரும் கவுதம் அதானி, சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

கவுதம்அதானியின் நிகர சொத்து மதிப்பு 8,850 கோடி டாலராக(ரூ.6.60 லட்சம் கோடி)  அதிகரித்து ஆசியாவிலேயே பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்  நிறுவனர் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 8790 கோடி டாலராக இருக்கிறது. ஏறக்குறைய முகேஷ் அம்பானியின் சொத்தைவிட 1200 கோடி டாலர் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக லாபம் ஈட்டிய தொழிலதிபர் என்ற பெருமையும் அதானிக்குதான் உண்டு. 

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அதானி குழுமத்தின் பங்குகள் 600 சதவீதம் உயர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் கட்டுமானத்தில் அதிகமாக அதானி நிறுவனங்கள் முதலீடு செய்துவருவது பெரும்பலனை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு கட்டமைப்புத் திட்டங்களுக்கு செலவிடுவதும் அதானி குழுமத்துக்கு வாய்ப்பாக அமைந்தது. 

2020ம் ஆண்டு அம்பானியின் ஆண்டாக இருந்தது. கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல் பிரிவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக ஈட்டியது. அதுமட்டுமல்லாமல் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் செய்த முதலீடும் அம்பானி உயர காரணமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அதானியின் ஆண்டாக மாறியது. 1200 கோடி டாலர் வருமானத்தை அதானி குழுமம் ஈட்டியுள்ளது.

இந்தியாவில் ஏராளமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுத்துவரும்அதானி, அடுத்த 3 ஆண்டுகளில் 1000 கோடி டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் அதிகமான முதலீட்டைச் செய்த நிறுவனமாக அதானி குழுமம் இருக்க வேண்டும் என அதானி விரும்புகிறார்.

இது தவிர பிரான்ஸைச் சேர்ந்த எண்ணெய் நிறுவநமான வார்பர்க் பின்கஸ் எல்எல்சி அதானியின் க்ரீன் எனர்ஜி பிரிவிலிருந்து 20%பங்குகளை வாங்கக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2500 கோடி டாலராகும். இது தவிர 1.10 கோடி டாலர்களைஅதானியின் துறைமுகங்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்திலும்முதலீடு செய்ய இருப்பதாகவும் வார்பர்க் தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டுக்குள் அதானியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு 8 மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதானி குழுமத்தின் வசம் இந்தியாவில் 7 விமானநிலையங்கள் உள்ளன, அதாவது இந்திய விமானப் போக்குவரத்து பிரிவில் கால்பகுதி அதானியிடம் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய விமானநிலையத்தை இயக்குபவர், எரிசக்தி துறையில் முன்னோடி, இயற்கை எரிவாயு பிரிவில் முன்னிலை என பல்வேறு அதானி முதலிடத்தில் உள்ளார்.

click me!