
இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மீது பலதுறை வல்லுனர்கள் மற்றும் வியிபார நிறுவனங்கள் என ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர். மத்திய பட்ஜெட் 2022 தாக்கலான பின், அதுபற்றி பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மத்திய பட்ஜெட் பற்றிய கருத்துக்களை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.
"உலகம் பெருந்தொற்றில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் பட்ஜெட் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. எதிர்காலத்திற்கான திட்டமிடல்கள் நிறைந்து, உள்நாட்டு புதுமைகளை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. இது இந்தியாவின் ஆத்ம நிர்பார் (சுய-சார்பு) கனவை ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த ஒரு படி அருகே அழைத்து செல்கிறது. நன்றி, (நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து) ஜெய் ஹிந்த்," என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி உள்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மத்திய பட்ஜெட் பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.