
கே.டி.எம். நிறுவனம் எலெக்ட்ரிக் டியூக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றிய விவரங்கள் பைரெர் மொபிலிட்டியின் ஜீரோ எமிஷன் திட்டங்கள் அடங்கிய தரவுகளில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டே ஹஸ்க்வர்னா பிராண்டு இ பைலென் மாடலை அறிமுகம் செய்ததை அடுத்து கே.டி.எம். தனது எலெக்ட்ரிக் டியூக் மாடலை உருவாக்க துவங்கி இருக்கிறது.
எலெக்ட்ரிக் திறன் கொண்ட டியூக் மாடல் இ டியூக் என அழைக்கப்படலாம். மேலும் இந்த மாடல் இ பைலென் மாடலை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது. இ பைலென் மாடலில் 5.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 19 கிலோவாட் அளவு திறன் வழங்கும். இது 13.4 பி.ஹெச்.பி.-க்கு இணையான திறன் ஆகும். அந்த வகையில் இ டியூக் மாடல் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எனலாம்.
பைரெர் மொபிலிட்டிக்கு அதிக விற்பனையை சிறிய ரக மாடல்கள் ஈட்டித் தருகின்றன. அந்த வகையில், கே.டி.எம். நிறுவனமும் முதலில் எண்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இது அந்நிறுவனத்திற்கு அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் என கூறப்படுகிறது.
புதிய மாடல் பற்றிய விவரங்களை கே.டி.எம். ரகசியமாக வைத்திருக்கிறது. எனினும், இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு கே.டி.எம். சூப்பர் டியூக் R மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடலின் வெளியீட்டு விவரங்களும் மர்மமாகவே உள்ளன. தற்போதைய தகவல்களின் படி இ டியூக் மாடல் 2024 வாக்கில் ஹஸ்க்வர்னா இ பைலென் மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.