Fastag:பாஸ்டேக், கோடிகளில் வருமானத்தை கொட்டும் அட்சயப்பாத்திரம்: 3 ஆண்டுகளில் எவ்வளவு தெரியுமா?

Published : Feb 09, 2022, 04:07 PM ISTUpdated : Feb 09, 2022, 04:13 PM IST
Fastag:பாஸ்டேக்,  கோடிகளில் வருமானத்தை கொட்டும் அட்சயப்பாத்திரம்: 3 ஆண்டுகளில் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்த பாஸ்டேக் மூலம்கடந்த 3 ஆண்டுகளில் வருமாம் கோடிகளில் கொட்டியுள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்த பாஸ்டேக் மூலம்கடந்த 3 ஆண்டுகளில் வருமாம் கோடிகளில் கொட்டியுள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், பணமாக கட்டணம் செலுத்தாமல், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பாஸ்டேக் மின்னணு அட்டைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், www.ihmcl.co.in என்ற, இணையதளம் வாயிலாகவும், 'my Fastag' மொபைல் ஆப் வாயிலாகவும் வழங்கி வருகிறது. பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பண வங்கிகள் வாயிலாகவும், பாஸ்டேக் அட்டைகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பேஸ்டேக் மூலம் கடந்த 2019 முதல் 2021-22 வரை வசூலான தொகை குறித்து மாநிலங்களவையில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டபின் 2022, ஜனவரி 31-ம் தேதிவரை நாட்டில் 4.59 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்கு பாஸ்டேக் அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பாஸ்டேக் மூலம் ரூ.58ஆயிரத்து 188 கோடி கட்டணம் வசூலாகியுள்ளது.

கடந்த 2019-20ம் ஆண்டு பாஸ்டேக் மூலம் ரூ.10ஆயிரத்து 728 கோடி வசூலானது. 2020-21ம் ஆண்டில் கொரோனா பரவலால் லாக்டவுன் இருந்தபோதிலும் கூட, ரூ.20ஆயிரத்து 837 கோடி வசூலானது. 2021-22ம் ஆண்டில்ஜனவரி மாதம் வரை ரூ.26 ஆயிரத்து 622 கோடி கட்டணம் வசூலாகியுள்ளது.

கடந்த 2020, ஜனவரி முதல் தவறுதலாக பாஸ்டேக்கில் கட்டணம் கழித்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு பணம் திருப்பி தரப்பட்டுள்ளது. அந்த வகையில் 2022, பிப்ரவரி 5-ம் தேதிவரை 12.50 லட்சம் பேருக்கு பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது.

தவறுதலாக பாஸ்டேக்கிலிருந்து வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணம்வசூலிப்பதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. 

1.    கடந் 2018ம் ஆண்டு இன்டர்பேஸ் கன்ட்ரோல் டாக்குமென்ட் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் போலியாக பாஸ்டேக் தயாரித்து வருபவர்கள் தடுக்கப்படுவார்கள்.
2.    இருமுறை பணம் கழித்துக்கொள்ளப்படுவதை தடுக்கும் வழிகள் செய்யப்பட்டுள்ளன. பாஸ்டேக் மூலம் கூடுதல் கட்டணம் பிடிக்கப்பட்டிருந்தால் திருப்பித் தரப்படும். கூடுதலாக பணம் பிடிக்கப்பட்டால்,தாமாகவே கணக்கில் பணத்தை திருப்பிச் செலுத்துதல், பணத்தை கூடுதலாக பிடித்தம் செய்த நிறுவனங்கள், வங்கிகள், ஏஜென்சிகள் மீது நடவடிக்கை


3.    அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஐடிசி தொழி்ல்நுட்பத்தை பொருத்துதல். இதன் மூலம் பாஸ்டேக் மூலம் பணம் கழிக்கப்படும்போது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
4.    அதிக கட்டணம் வசூலித்தல், இருமுறை பணம்பிடித்தல், அதிகாரபூர்வமற்ற வகையில் பரிமாற்றம் ஆகிய தொடர்பாக அளிக்கப்படும் புகார்களை விசாரிக்க பிரிவு அமைப்பு

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்