Single Mother முதல் இந்தியாவின் பணக்கார பெண் வரை.. மீரா குல்கரினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

By Ramya s  |  First Published Aug 11, 2023, 11:00 AM IST

இந்திய அழகு பிராண்டான ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸ் (Forest Essentials) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மீரா குல்கர்னியின் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை குறித்து தற்போது பார்க்கலாம். 


வாழ்க்கையில் எல்லா தடைகளையும் தாண்டி அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு மீரா குல்கர்னியை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆம். இந்திய அழகு பிராண்டான ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸ் (Forest Essentials) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மீரா குல்கர்னியின் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை குறித்து தற்போது பார்க்கலாம்.  20 வயதில் திருமணம் செய்து, குடிகாரக் கணவனிடமிருந்து பிரிந்து, இரண்டு குழந்தைகளின் ஒற்றைத் தாயான மீரா, பிரீமியம் ஆயுர்வேத ஸ்கின் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தற்போது ரூ.1,290 கோடி நிகர மதிப்புடன், இந்தியாவின் பணக்கார பெண்களில் மீரா இடம் பிடித்துள்ளார்.

மீரா குல்கர்னியின் போராடும் நாட்கள்

Tap to resize

Latest Videos

மீராவுக்கு 20 வயதில் திருமணம் நடந்தது.திருமணத்திற்குப் பிறகு கணவரின் வியாபாரம் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது, அவரின் மதுப்பழக்கம் தொடர்ந்தது. எனவே மீரா கணவரை பிரிந்தார். எனினும், தன் பெற்றோர் இருவரையும் இழந்ததால், தனி ஆளாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது இரண்டு சிறு குழந்தைகளையும் ஒற்றைத் தாயாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மீராவுக்கு இருந்தது.எவ்வாறாயினும், மீரா ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாகக் கருதினார். தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்தார்.

45 வயதில், மீரா தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு தொழிலைத் தொடங்கினார். முதலில் மெழுகுவர்த்திகளை தயாரிக்க தொடங்கிய அவர், விரைவில் கையால் செய்யப்பட்ட சோப்புகளை தயாரித்தார். அமெரிக்காவில் படிக்கும் மகனைப் பார்க்கச் சென்றபோது கிடைத்த வாய்ப்புக் காரணமாக சோப்பு தயாரிப்பில் பயிற்சி பெற்றார். பழமையான ஆயுர்வேத நடைமுறையின் அடிப்படையில் முற்றிலும்புதிய இந்திய வணிகத்தைத் தொடங்க மீரா முடிவு செய்தார்.

ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் உருவானது எப்படி?

மீராவுக்கு இளம் வயதிலேயே ஆயுர்வேத வாழ்க்கை முறை அறிமுகமானது. 2000 ஆம் ஆண்டில், ஆயுர்வேத சூத்திரங்களின் கொள்கைகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு ஆடம்பர ஸ்கின் கேர் பராமரிப்புக்கான ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவர் தெஹ்ரி கர்வால் பகுதியில் இருந்து உள்ளூர் மூலப்பொருட்களை வாங்கினார். இந்த தயாரிப்புகள் பாரம்பரிய ஆயுர்வேத சூத்திரங்களைப் பயன்படுத்தி ஆசிரமங்களில் தயாரிக்கப்பட்டன. நவீன உயிர்வேதியியல் வல்லுநர்கள் உதவியுடன் பல்வேறு தயாரிப்புகளை உருவாக்க மீரா பல ஆண்டுகள் செலவிட்டார். ஃபாரஸ்ட் எசென்ஷியல் நிறுவனம் முகம், உடல், முடி, ஒப்பனைக்கா பொருட்கள் ஆண்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், குழந்தைகள் தயாரிப்புகள் என பல்வேறு பொருட்களை தயாரிக்கிறது.

தயாரிப்புகளுக்கான ஆர்டர்கள் வந்தவுடன், ஒரு வாகன நிறுத்துமிடத்தில் தொடங்கிய ஆடம்பர தோல் பராமரிப்பு முயற்சியானது கடைகளுக்கு மாறியது. இந்நிறுவனம் படிப்படியாக 28 இந்திய நகரங்களில் விற்பனை நிலையங்களுடன் பல கோடி வணிகமாக உருவெடுத்தது. ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸ் மற்றும் எஸ்டீ லாடர் நிறுவனங்கள் 2008 இல் ஒன்றாக இணைந்தது.

அழகாகவும், ஆடம்பரமாகவும், அழகான மணம் கொண்டதாகவும் இருக்கும் கையால் செய்யப்பட்ட ஸ்கின் கேர் பொருட்களை உருவாக்கும் வெளிப்படையான நோக்கத்துடன், மீரா ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸை நிறுவினார். இன்று, மீராவின் ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மீரா குல்கர்னி வெறும் ரூ.2 லட்சம் முதலீடு மற்றும் 2 ஊழியர்களுடன் தனது தொழிலை தொடங்கினார். இன்று, அவரது பிராண்ட் இந்தியா முழுவதும் 110 க்கும் மேற்பட்ட கடைகளையும், வெளிநாடுகளிலும் பல கடைகளையும் கொண்டுள்ளது. புகழ்பெற்ற தாஜ் மற்றும் ஹயாட் போன்ற 300 ஹோட்டல்களையும், கிட்டத்தட்ட 150 ஸ்பாக்களையும் உள்ளடக்கிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளார்.

பல ஆண்டுகளாக ஃபார்ச்சூன் இதழால் இந்தியாவிற்கான வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி என்ற பட்டம் உட்பட பல விருதுகளை மீரா பெற்றுள்ளார். கோடக் வெல்த் ஹுருனின் 2020 பதிப்பின் படி - பணக்கார பெண்களின் பட்டியலில் மீரா குல்கர்னி மற்றும் குடும்பம் 1,290 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 35 வது இடத்தைப் பிடித்தது, மேலும் அவர் இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார்.

காதலனை திருமணம் செய்ய ரூ.2,484 கோடி சொத்துக்களை விட்டு சென்ற பெண்! வைரல் லவ் ஸ்டோரி..

click me!