அக்டோபர் 1ம் தேதிமுதல் ரயில்வே சீசன் தொடங்கிவிடும் என்பதால், சரக்குகளுக்கு சர்சார்ஜ் கட்டணம் விதிக்கும் முறையை ரயில்வே மீண்டும் கொண்டு வர இருக்கிறது.
அக்டோபர் 1ம் தேதிமுதல் ரயில்வே சீசன் தொடங்கிவிடும் என்பதால், சரக்குகளுக்கு சர்சார்ஜ் கட்டணம் விதிக்கும் முறையை ரயில்வே மீண்டும் கொண்டு வர இருக்கிறது.
கொரோனா காலத்திலிருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்குகளுக்கான சர்சார்ஜ் விதிக்கும் முறை மீண்டும் கொண்டுவரப்படுகிறது. இதனால் ரயில்களில் சரக்குகளை ஏற்றுவதற்கான கட்டணம் அதிகரிக்கும். அனைத்து விதமான சரக்குகளுக்கும் சர்சார்ஜ் கட்டணம் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் எனரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரயில்களில் அனுப்பப்படும் நிலக்கரி, கோக், கன்டெய்னர், வாகனங்கள் தவிர்த்து அனைத்து சரக்குகளுக்கும் சர்சார்ஜ் விதிக்கப்படும். இதன் மூலம் உரம், சிமென்ட், உணவுதானியங்கள் விலை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கும்.
இப்போது காந்தி அல்ல வத்ரா: பிரியங்கா தலைவராகலாமே! காங்கிரஸ் எம்.பி. புதிய யோசனை
இந்த சர்சார்ஜ் அக்டோபர் 1ம் தேதி முதல் ஜூன் 30ம்தேதிவரை விதிக்கப்படும். நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் மந்தமாகியதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி சர்சார்ஜ் விதிப்பதை ரயில்வே நிறுத்தியது. இரும்பு தாது, பெட்ரோலியம், கச்சா எண்ணெய் அதுசார்ந்த பொருட்கள் தவிர அனைத்துக்கும் சர்சார்ஜ் நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
ரயில்வேயின் பிஸியான காலத்தில் மட்டும் சர்சார்ஜ் கட்டணம் விதிக்கப்டும். கடந்த 2018ம் ஆண்டுவரை சர்சார்ஜ் 12சதவீதமாக இருந்தது, அதன்பின் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு சர்சார்ஜ் கட்டணம் நீக்கப்பட்டதையடுத்து, ரயில்களில் சரக்குகளின் அளவும், போக்குவரத்தும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு ரயில்வே சரக்குகள் மூலம் வருவாய் ரூ.10,867 கோடியாக இருந்தது, இது 2022, ஆகஸ்ட் மாதம் வரை ரூ.12,927 கோடியாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்:திக்விஜய் சிங் இன்று வேட்புமனு; கழற்றிவிடப்படும் கெலாட்
இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் மாத்தூர் கூறுகையில் “ பயணிகள் ரயில்கள் மூலம் ரயில்வேதுறைக்கும் கடும் இழப்பு ஏற்படுகிறது. அதிலும் பண்டிகைக் காலத்தில் ரயில்வே துறை அதிகமான ரயில்களை இயக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறது. இது ரயில்வேயின் நிதிநிலைக்கு கடும் அழுதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிதிநெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் சரக்குக் கட்டணத்தில் சர்சார்ஜ் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்