நிர்மலா சீதா ராமனை விமர்சிக்கும் ப.சிதம்பரத்தின் 1996 -ஆம் ஆண்டு ’கனவு பட்ஜெட்’ பற்றி ஒரு பார்வை

Published : Feb 05, 2022, 05:13 PM ISTUpdated : Feb 05, 2022, 05:17 PM IST
நிர்மலா சீதா ராமனை விமர்சிக்கும் ப.சிதம்பரத்தின் 1996 -ஆம் ஆண்டு ’கனவு பட்ஜெட்’  பற்றி ஒரு பார்வை

சுருக்கம்

காலங்கள் மாறுகிறது; மக்கள் மாறுகிறார்கள்; அரசியல் தலைவர்களும் கட்சிகளை மாற்றிக்கொள்கிறார்கள்; அப்படியிருக்கும்போது, 1996ம் ஆண்டு “கனவு பட்ஜெட்டை”(Dreambudget) தாக்கல் செய்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-23ம் நிதியாண்டு பட்ஜெட்டை பணக்காரர்களுக்கானது என்று யுடர்ன் அடித்து சொல்வதில் வியப்பில்லை.

காலங்கள் மாறுகிறது; மக்கள் மாறுகிறார்கள்; அரசியல் தலைவர்களும் கட்சிகளை மாற்றிக்கொள்கிறார்கள்; அப்படியிருக்கும்போது, 1996ம் ஆண்டு “கனவு பட்ஜெட்டை”(Dreambudget) தாக்கல் செய்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-23ம் நிதியாண்டு பட்ஜெட்டை பணக்காரர்களுக்கானது என்று யுடர்ன் அடித்து சொல்வதில் வியப்பில்லை.

அரசியல் தலைவர்கள் என்றாலே தங்கள் நிலைப்பாட்டை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார்கள் எனக் கூறுவதில் வியப்பில்லை. ஆனால், முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், பல கட்சிகளில் பயணித்தாலும் 2022-23ம் ஆண்டு பட்ஜெட் குறித்த அவரின் விமர்சனங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-23ம்நிதியாண்டு பட்ஜெட் கார்பரேட் நிறுவனங்களுக்கானது, பணக்காரர்களுக்கானது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார். ஆனால், ப.சிதம்பரத்தின் விமர்சனம் தன்னுடைய பட்ஜெட்டுக்கு கிடைத்த சான்று என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டைபற்றி விவாதிக்கும்முன் கடந்த 1996ம் ஆண்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த ட்ரீம் பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ப.சிதம்பரம் எம்.பி.யாகி, தேவகவுடா தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் நிதிஅமைச்சராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த கூட்டணி அரசு நிலைக்கவில்லை. 

காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அடிதொட்டு, நானும் மக்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்று கூறி ப.சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்தான் பொருளாதாரத்துக்கு உண்மையான பூஸ்டர் அளிக்கும் பட்ஜெட் என அப்போது ஊடகங்கள் புகழ்ந்தன.

அந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான அதிகபட்ச வருமானவரி விகிதம் 40 சதவீதமாக இருந்ததை ப.சிதம்பரம் 30 சதவீதமாகக் குறைத்தார். உள்நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வருமானவரி வீதத்தை 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமகாகக் குறைக்கப்பட்டது. குறைந்தபட்ச மாற்றுவரியை ப.சிதம்பர் அறிமுகம் செய்து, எம்ஏடி கிரெட்டை 5 ஆண்டுகள் வரை வைக்க அனுமதித்தார்.

ப.சிதம்பரத்தின் துணிச்சலான அறிவிப்புகளில் ஒன்றாக, வருமானவரி செலுத்தாமல்  மறைத்தவர்கள் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் விதமாக தாமாக முன்வந்து கணக்கு தாக்கல் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

மத்திய அரசு அரசின் சொத்துக்களை, பங்குகளை விற்பனை செய்கிறது என்று விமர்சிக்கும் ப.சிதம்பரம்தான், முதன்முதலில் அதற்கான பங்கு விலக்கல் துறையையே இவர்தான் அறிமுகப்படுத்தினார். சுங்கவரி உச்சத்தில் இருந்த நிலையில் அதை 50%லிருந்து 40 சதவீதமாக ப.சிதம்பரம் குறைத்தார். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் அளவும் இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டது. 

ஆனால், கனவு பட்ஜெட்டின் முக்கியத் தாக்கம் என்னவென்றால், தாமாக முன்வந்து வருமானவரி தாக்கல் செய்யும் திட்டத்தால் வருமானவரி வசூல் பெரிதாக உயரவில்லை. அதில் ரூ.18,700 கோடி வரி வசூலானது. அதன்பின் 2013ம் ஆண்டு வரை வருமானவரி வசூல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் கோடியாக மட்டுமே வளர்ந்திருந்தது.

கடந்த 1996ம் ஆம்டு பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை, முயற்சிகளை தற்போது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசும் எடுத்து வருகிறது. கிராமப்புற வங்கி, கிராமப்புற கட்டமைப்பு மேம்பாடு நிதி, மாநில அளழில் வேளாண் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்றவை உருவாக்கப்ட்டன. இந்த திட்டங்கள் மூலம் வர்த்தகரீதியாகவும், வேளாண் தொழில்நுட்பத்திலும், அதுதொடர்பான பணிகளான தோட்டக்கலை, பூக்கள் வளர்ப்பு உள்ளிட்டவற்றில் முதலீட்டை ஊக்குவிக்கும். ஆக 1996ம் ஆண்டு பட்ஜெட்டில் இருந்ததைப் போன்ற பல திட்டங்களை மோடி தலைமையிலான அரசும் செய்து வருகிறது, திட்டங்களை அறிவித்துள்ளது.

ஒரு பட்ஜெட் கார்ப்பரேட்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தால், பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வாக இருக்கும் எனக் கூறப்படுவதுண்டு. ஆனால், நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலுக்குப்பின் மும்பைப் பங்குசந்தையிலும், தேசியப்பங்குச்சந்தையிலும் உயர்வு இருந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால் 1996ம்ஆண்டு இருந்த உயர்வைப் போன்று இல்லை.

1996ம் ஆண்டு ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தபின், சென்செக்ஸ் 6.5 சதவீதம் உயர்ந்தது. இதோடு ஒப்பிடும்போது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு இருந்த வரவேற்பு குறைவுதான். வர்த்தகம் செய்வோர், பணக்கார்ரகள் உற்சாகத்தில் இருப்பதைவிட சற்று எச்சரிக்கையாகவே நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை அணுகினர்

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் பெரிய குறையாக எதிர்க்கட்சிகள் கூறுவது ஏழைகள் கைகளில் அதிகமான பணத்தை நேரடியாக வழங்கவில்லை என்பதும், தனிநபர் வருமானவரி தொடர்பாக அறிவிப்பு இல்லை என்பதுதான்.

 ஆனால், நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கத்தை மனதில் வைத்தும், சர்வதேச சந்தையின் சூழலால் நிறுவனங்களுக்கான உள்ளீட்டுச் செலவு அதிகரித்துவருவது ஆகியவற்றை மனதில் வைத்துதான் பட்ஜெட்டில் பெரிய அளவில் வருமானவரி மாற்றல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. இந்தியாவில் 3 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள், ஆனால், மறைமுகவரி உயர்த்தப்படும்போது அது பெரும்பகுதியான மக்களையும் பாதிக்கிறது. 

5 மாநிலத் தேர்தல் நெருங்கி வருவதால், பட்ஜெட்டில் பலவிதமான கவர்ச்சி அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி எப்போதுமே, மக்களுக்கு நலன்களை வழங்கும் திட்டங்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளார். மாறாக, அதிகமான வீண் செலவுகளையும், பயனளிக்காத திட்டங்களின் மீது இல்லை. பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் கரீப் கல்யான் யோஜனா போன்ற திட்டங்கள்எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதே நலன்கள் மட்டுமே முக்கியம் என்பதற்கான சாட்சி

பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், கதி சக்தி, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில்தான் சீதாராமன் அதிகமாக கவனம் செலுத்தியுள்ளார்.

மத்திய அரசு முதலீட்டுக்காக செலவிடும் தொகை மக்களுக்கான வேலைவாய்ப்பாக மாற வேண்டும், வருமானத்தைதர வேண்டும் என்று விரும்புகிறது. இந்த திட்டங்களை நீண்டகாலத்தில் செயல்படுத்தும்போது அதன் பலன் கிடைக்கும். 

கவர்ச்சிகரமான பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல்செய்திருந்தால் அதற்குரிய வரவேற்பு தனிதான், ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கான நன்கு திட்டமிட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது இதுபோன்று குறைந்த அளவு வரவேற்பு கிடைப்பது இயல்புதான். இதன் பலன்களை நேரடியாக பார்க்கமுடியாது, நீண்டகாலத்தில்தான் உணர முடியும். 

பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களுடன் இந்த பட்ஜெட் ஒத்துப்போகிறது. கொரோனாவுக்கு பிந்தைய உலகில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உறுதியான திட்டமிடலுடன் மத்திய அரசு நகர்கிறது. 
எப்போதுமே ஒரு செயலுக்கு இரு விதமான கருத்துக்கள் இருப்பதுஇயல்புதான். கண்ணாடி டம்ளர் பாதியளவு நிரம்பி இருந்தாலும், இன்னும் செய்திருக்கலாம், எதுவுமே செய்யவில்லை என்ற பேச்சு இருப்பது இயல்புதான். 


கனவுகள் ஓர் இரவில் நனவாகிவிடாது, 1996ம் ஆண்டிலிருந்தே  நமக்கு தெரிந்ததுதானே


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!