ப்ரீ கால்ஸ்கு ரூ 99,  டேட்டாவிற்கு ரூ 3௦3.... எப்படி வசதி ?

First Published Feb 22, 2017, 12:19 PM IST
Highlights


ப்ரீ கால்ஸ்கு ரூ 99,  டேட்டாவிற்கு ரூ 3௦3.... எப்படி வசதி ?

ஜியோவின்   அளவில்லா  சலுகையால், மற்ற   தொலைதொடர்பு நிறுவனங்கள்  பெரும் கடுப்பில் உள்ளன.   இந்நிலையில்  வரும் மார்ச் மாதம் முடிய  ஜியோவின்  சலுகை முடியும் தருவாயில்,  நேற்று   முகேஷ்  அம்பானி  பல  சலுகைகளை  அறிவித்தார்.  

ரிலையன்ஸ்  ஜியோ பல அதிரடி சலுகைகளை அறிவித்து,  மக்கள்  மனதில்   பெரிய  இடத்தை பிடித்துள்ளது. ப்ரீ  டேட்டா  சலுகையால், பெரும்பாலனா மக்கள்  தற்போது ஜியோ  சிம்  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் 1௦௦  மில்லியனை  கடந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

1௦௦ மில்லியன்  வாடிக்கையாளர்களை  தன்  வசம் வைத்துள்ள  ஜியோ, வாடிக்கையாளர்களை   தக்க வைத்துக்கொள்வதற்காக, பல  புதிய  சலுகைகளை  முகேஷ்  அம்பானி அறிவித்தார்.

பழைய வாடிக்கையாளர்கள்

தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்  ப்ரீ  டேட்டா  சர்வீஸ், வரும்  மார்ச்  மாதம்  முடிவடையும்  தருவாயில், தொடர்ந்து  ப்ரீ சர்வீசை மார்ச் 31, 2018  வரை  பயன்படுத்த சலுகையை நீட்டித்துள்ளார் முகேஷ் அம்பானி

99 ரூபாய்க்கு ரீசார்ஜ்

ப்ரீ டேட்டா சர்வீஸ் அடுத்த மாதம்  முடியும் தருவாயில், 99 ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்தால்,  அடுத்த 12  மாதங்களுக்கு  அன்லிமிடட்  கால்ஸ்  பெறலாம் .

அதேபோல், ப்ரீ  டேட்டா  பயன்படுத்த வேண்டுமென்றால், அதாவது (1gb/4g ) பெற , மாதம்  தோறும்  ரூபாய் 303  கு ,      ரீ சார்ஜ் செய்தால் போதும்.

அவரவர் வசதிக்கேற்ப ப்ரீ கால்ஸ்  வேண்டுமென்றாலும், அல்லது டேட்டா மட்டும் வேண்டுமென்றாலும்  அதற்கேற்றாவாறு  ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்  .  

 

click me!