ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது ....."ஸ்மார்ட் ரேஷன் கார்டு"

 
Published : Feb 21, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது ....."ஸ்மார்ட் ரேஷன் கார்டு"

சுருக்கம்

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது ஸ்மார்ட் ரேஷன் கார்டு……!!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ்   தெரிவித்துள்ளார். மேலும்  அதற்கான  ஆயத்த பணிகள்  முழுவீச்சில்  நடைபெற்று  வருவதாகவும் தெரிவித்தார்.

ஆதார்  அட்டை  அவசியம்

தொடர்ந்து பேசிய  அமைச்சர்  காமராஜ்  மேலும்  பல  கருத்துக்களை  முன்வைத்தார். அதன்படி,. ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் , இதுவரை 80  சதவீத மக்கள், ஆதார் எண்ணை, ரேஷன்  அட்டையுடன்  இணைத்து  விட்டதாகவும்,  மீத்யமுள்ள 2௦ சதவீத மக்கள்  தற்போது ஆதார்  எண்ணை  ரேஷன்  அட்டையுடன்  இணைத்து  வருவதா கவும்  குறிபிட்டார் .

போலி  ரேஷன்  கார்டு

5.65 கோடி பேர் குடும்ப அட்டையில் இதுவரை ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறிய அவர், 5 லட்சத்து 41 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  மேலும்,  தமிழகத்தில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாகவும்  அமைச்சர்  காமராஜ்  தெரிவித்தார்  

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!