பூக்களின் விலை அதிரடி உயர்வு..! கிலோ ரூ.1000 தாண்டியது..!

By ezhil mozhiFirst Published Jan 18, 2019, 12:37 PM IST
Highlights

குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கனகாம்பரம் பூ விலை அதிரடி உயர்வு கண்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பூ மார்க்கெட் ஒன்று உள்ளது.
 

நேற்று ஒரே நாளில், கனகாம்பரம் பூ கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.1000 -கு விற்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கனகாம்பரம் பூ விலை அதிரடி உயர்வு கண்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பூ மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் நெல்லை,மதுரை,குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும், இந்நிலையில் நேற்று ஒரு கிலோ விலை ரூபாய் 300 கு விற்கப்பட்டு வந்த கனகாம்பரம்,நேற்று ஒரே நாளில் ரூபாய் 700 உயர்ந்து 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

இதேபோல 550 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை பூக்கள் விலையில் 600 ரூபாய் உயர்ந்து உயர்ந்து, கிலோ ரூ.1250 கு விற்கப்பட்டது. இதே போன்று மல்லிகை பூக்கள் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன் படி, ரூ.500 கு விற்கப்பட்ட மல்லைகை பூ நேற்று 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட்டது.

நேற்று காணும் பொங்கல் என்பதால், பூக்களின் வியாபாரம் அமோகமாக இருந்துள்ளது. அதே சமயத்தில், பூக்கள்  வரத்து குறைவாக இருந்ததே, இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணமென வியாபாரிகள் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!