
மதுபானங்களுக்கு 14.5 சதவிகிதம் வரியை உயர்த்தி தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.
தமிழகத்தின் நிதி பற்றாக்குறையைத் தவிர்க்கவும், வருவாயை அதிகரிக்கவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக 14.5 சதவிகிதம் வரி உயர்த்துவதற்கான சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு இறக்குமதியாகும் மது வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது. இதனால், டாஸ்மாக் எலைட் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் உயரக்கூடும்.
ஏற்கெனவே பெட்ரோல் - டீசல் - மது பானங்கள் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்தின் நிதி பற்றாக்குறையைத் தவிர்க்கவும், வருவாயை அதிகரிக்கவும், 'வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது பானங்களுக்கு கூடுதலாக 12 சதவிகிதம் வரி உயர்த்தப்படும்' என சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகளுக்கு முறையே 56 சதவிகிதத்திலிருந்து 62 சதவிகிதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. எலைட் கடைகளில் நேரடியாக அந்நிய மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.