
பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவுக்கு கால்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று முன்தினம் விழுந்து நொறுங்கியதால், அதில் பயணம் செய்த 19 கால்பந்து வீரர்கள், 20 பத்திரிக்கையாளர்கள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், விமானத்தில் இருந்து கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டது.
முன்னதாக, விமானம் நொறுங்கி விழுந்ததற்கு பின் ஏதாவது சதி வேலை நடந்து இருக்குமா என சந்தேகிக்கப்பட்டது........
இந்நிலையில் கருப்பு பெட்டியின் மூலம் சில உண்மைகள் வெளிவந்துள்ளது. அதன்படி, விமானத்தின் பைலட்டும், விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியரும் பேசிய ஆடியோ ஒன்று ரகசியமாக வெளியே வந்துள்ளது.
அதில், விமான பைலட், விமானத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்றும், மின்சாதனங்கள் எதுவும் இயங்கவில்லை...... பெட்ரோலும் தீர்ந்து வருகிறது... நான் உடனடியாக விமானத்தை கீழே இறக்க வேண்டும்...... அதற்கு வழிகாட்டுங்கள் என்று பேசும் பதிவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை வைத்து பார்க்கும் போது, விமானத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதா ? அல்லது வேறு ஏதாவது கசிவு ஏற்பட்டு, பழுது நடந்ததா ..? என விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியிடவில்லை...... என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.