FD interest: வரியையும் சேமிங்க! காசும் பாருங்க! முதியோருக்கு உச்சபட்ச வட்டியளிக்கும் 10 வங்கிகள்

By Pothy RajFirst Published Jun 11, 2022, 2:23 PM IST
Highlights

FD interest :முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பற்றிய பயம் இன்றி, சீரான வருமானம் தரும் திட்டம் இருக்கிறதென்றால், அது வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் செயல்படும் வைப்புநிதி திட்டங்கள்தான்

முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பற்றிய பயம் இன்றி, சீரான வருமானம் தரும் திட்டம் இருக்கிறதென்றால், அது வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் செயல்படும் வைப்புநிதி திட்டங்கள்தான்

ஆனால், ஏராளமான மக்கள் விரைவாக லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கில் தெரிய வழியான பங்குச்சந்தையிலும், கிரிப்டோவிலும் முதலீடு செய்து தங்கள் முதலீட்டை இழக்கிறார்கள். அதிலும் முதியோர் சிலர் இதில் முதலீடு தங்களின் கடினமாக சம்பாதித்த பணத்தையும்இழக்கிறார்கள்.

பங்குச்சந்தை,கிரிப்டோகரன்ஸியில் லாபம் வராது என்பதற்கில்லை. ஆனால், அதில் இடர்பாடுகள் அதிகம். இதுபோன்ற கரணம் தப்பினால் மரணம் என்றிருக்கும் திட்டத்தில் முதலீடு செய்வதைவிட பாரம்பரிய, பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்து பணத்தையும், வரி செலுத்துவதிலிருந்தும் தப்பிக்கலாம். இதற்கு சிறந்த வழி காலம்காலமாக வங்கிகள், அஞ்சலகங்கள் வழங்கும் வைப்பு நிதித்திட்டங்கள்தான். 

வைப்பு நிதி என்றால் என்ன

ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அருமையான திட்டம் வைப்பு நிதித்திட்டம்தான். இந்தத் திட்டத்தில் வருமானவரித் தள்ளுபடியும் இருப்பது கூடுதல் சலுகை.அனைத்து வங்கிகளும் வரித்தள்ளுபடி சலுகை அளிக்கின்றன. நிலையான வட்டியும் வழங்குகின்றன. வரிசேமிப்பு வைப்புத் தொகையில் ஒருவர் முதலீடு செய்தால் வருமானவரிசெலுத்துவதில் 80சி பிரிவில் ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம். வைப்புத்தொகையிலிருந்து பெறும் வட்டிக்கு டிடிஎஸ் பிடிக்கப்பட்டாலும், அதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

முதியோருக்கான வரி சேமிப்பு  திட்டங்கள்

முதியோருக்கு வரி சேமிப்பு வைப்பு நிதித் திட்டங்கள்தான் வயதான காலத்தில் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் அதிகமான வட்டி முதியோருக்குக்கிடைக்கும். பொது முதலீட்டாளர்கள் வைப்புத் தொகையில் முதலீடு செ்யயும்போது, படிவம்15ஜி தாக்கல் செய்ய  வேண்டும்.

முதியோர் முதலீடு செய்யும்போது, படிவம் 15H தாக்கல் செய்தால் வரி பிடிக்கப்படாது. அதுமட்டுமல்லாமல், வைப்புத்தொகையிலிருந்து  பெறும் வட்டிக்கு ரூ.50ஆயிரம்வரை தள்ளுபடியும் 80TTB பிரிவில் கோர முடியும். முதியோருக்கு மட்டும்தான் வைப்புத்தொகையில் உயர்ந்த அளவுவட்டி கிடைக்கிறது. இந்த வைப்புத் தொகை குறைந்தபட்சம்5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.இதில் 5 அண்டுகளுக்கு இடையே தொகையை எடுக்க அனுமதிகிடையாது . 

அதிகவட்டி வழங்கும் 10 வங்கிகள்

1.    சர்யோதே சிறு நிதி வங்கி: 7.25% வட்டி(ஓர்ஆண்டு)

2.    ஏயு சிறு நிதி வங்கி: 7.25% வட்டி

3.    உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி: 7.10% வட்டி

4.    டிசிபி வங்கி: 7.10 % வட்டி

5.    யெஸ் வங்கி: 7% வட்டி

6.    இன்டஸ்இன்ட் வங்கி : 7% வட்டி

7.    ஆர்பிஎல் வங்கி : 6.80% வட்டி

8.    ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி: 6.75% வட்டி

9.    ஆக்சிஸ் வங்கி: 6.50% வட்டி

10.    ஈக்குடாஸ் சிறு வங்கி : 6.50% வட்டி

click me!